தானியேலை காபிரியேல் சந்தித்ததன் ஆறுவிதமான நோக்கங்கள் Jeffersonville, Indiana, USA 61-07-30E 1. ...இக்கூட்டத்தில் இன்று காலையில் பதினாறு வயதுள்ள நம்முடைய பெண் பிள்ளைகள் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்க எனக்கு மிகவும் வியப்பாயிருந்தது. அவர்கள் சபைக்கு வந்திருக்கிறார்கள். அந்த வயதுள்ள இளம் பெண்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அவர்கள் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். அவர்கள் தலைமுடியெல்லாம் தலையின் மேல் சுருள் சுருளாக சுருட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் பிரசங்கிக்கையில் அவர்களைக் கவனித்தேன். உலர்ந்து போன சுருள் முடி முகத்தில் வந்து விழ அதை அவர்கள் முகத்திலிருந்து பின்னால் தள்ளிவிட்டு கொண்டேயிருந்தார்கள். 2.சகோதரி டெளனிங்கின் மகளை நான் கவனித்தேன். சகோ. காலின்ஸ் - ன் மகள். அவள் பெயர் என்ன? பெட்டி - அழகுள்ள நமது குழந்தைகளை நான் கண்ட போது நான் எனக்குள்ளேயே நகைத்துக் கொண்டேன். அவர்கள் சரியான வயதை எட்டியிருக்கிறார்கள். பிரியமான பிள்ளைகளே, எப்படியாயினும் நீங்கள் என் பார்வைக்கு அழகாவே இருக்கிறீர்கள்; உங்கள் உள்ளங்கள் ஆசீர்வதிக்கப்படுவதாக. அழகு என்பது என்னவெனில், அது அழகான ஆவியாயிருக்கிறது. அந்த ஆவி வரும்போது, கூட்டங்களில் அதற்குரிய லட்சணத்தோடே அமர்ந்திருந்து, சுவிசேஷத்திற்கு செவிகொடுக்கச் செய்யும். அப்படிப்பட்ட நடத்தைதான் ஒரு பெண்ணை அழகுள்ளவளாக ஆக்குகிறது. திருமணம் செய்துகொள்ள வேண்டுமென இருக்கும் உரிய வயதை அடைந்துள்ள எந்தவொரு வாலிபனும் அதே விதமாகத்தான் சிந்திக்கிறான். (நன்றி ஐயா, அது நல்லதாயிருக்கிறது). சிலர் நான் கூறுவதை ஒத்துக் கொள்வார்கள். அது சரிதான். அது சத்தியமாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். 3.அது வினோதமாயிருக்கவில்லையா? நான் என் வேதாகமத்தைத் திறந்தபோது, நேரடியாக தானியேல் 9-ம் அதிகாரம் எனக்குக் கிடைத்தது. தங்களுடைய உள் சட்டையில் பொத்தல் இருந்தால் மேல் கோட்டை கழற்ற வேண்டாம் என்று நான் யாவரிடமும் கூறுவதுண்டு. ஆனால் நான் இப்போது அணிந்திருப்பதில் இல்லையென நம்புகிறேன். ஆனால் நிச்சயமாகவே பொத்தல் உள்ள சட்டையணிந்த சமயம் எனக்கு உண்டாயிருந்தது. அப்பொழுது என்னால் கோட்டை கழற்றவே முடியாது. இப்போது நான் அணிந்துள்ளதில் பொத்தல் இல்லை என்று கருதுகிறேன். இன்று காலையில் எனக்காகவும் இங்கு கூடியுள்ளோருக்காகவும் இங்கே பிரசன்னம் கொண்டுள்ள பரிசுத்த ஆவியைப் போற்றுகிறோம். இங்கே ஒவ்வொருவரும் வந்திருந்து ஐக்கியங் கொண்டுள்ளமைக்காக, அதை நாம் மெச்சுகிறோம். சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை இனிமையானது, எத்தனை நன்மையானது, எத்தனை சுகமானது! அது ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்பட்டு, அவன் தாடியில் வடிகிறதும், அவனுடைய அங்கிகளின் மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும் ஒப்பாயிருக்கிறது. 4.'ப்ளு போர்' என்ற உணவு விடுதிக்கு இன்று உணவருந்த சென்றேன். அங்கே நான் யாரைக் கண்டேன் என்று நினைக்கிறீர்கள்? அங்கே சகோ. பில் - ஐயும், சகோதரி டெள அவர்களையும். அங்கே மிகவும் உயர்தரமான பொறித்த கோழிக்கறியை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்டவைகளை நான் இதுவரையிலும் பார்த்ததேயில்லை. அதை மிகவும் ஆர்வமாக புசித்த ஒரு அருமையான வேளை அவர்களுக்கு உண்டாயிருந்தது. உணவு விடுதியில் மாடிக்குச் சென்ற சபையின் மக்களில் அநேகரை அங்கே சந்தித்தேன். அவர்கள் என்னுடைய மத்திய உணவுக்கான கட்டணத்தை செலுத்த விரும்பினர். அது மிகவும் அருமையான விஷயம்; நான் அதை மெச்சுகிறேன். நான் வீட்டிற்கு வந்தபொழுது, அங்கே பில்லி ஒரு பெட்டியை நிறைய தக்காளிப் பழங்களைக் கொண்டு வந்தான். யாரோ ஒருவர் குளிர்ச்சியான பிரதேசமாகிய ஜியார்ஜியாவிலிருந்து எனக்காக அவைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அங்கே இந்த சமயத்தில் மிகவும் குளர்ச்சியாக இருக்கும் என்று என்னிடம் கூறினார்கள். 5.இன்று மதியம் நான் நேர்முகப் பேட்டிகளை முடித்து விட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக சபைக்கு பக்கமாக வந்து கொண்டிருந்தபொழுது, அங்கே வெளியிலே ஒரு இளைஞனை நான் சந்தித்தேன். அவன் ஒரு இளம் வாலிபன் ''உஷ்ணமாயிருக்கிறது'' என்று நான் கூறினேன். அவன் அதற்கு ''அது நிச்சயம் உஷ்ணமாகத்தான் இருக்கிறது“ என்று அவன் கூறினான். அவன் ஜியார்ஜியாவிலிருந்து வந்திருக்கிறவன் என்பதை நான் அவனுடைய பேச்சின் மூலம் அறிந்து கொண்டேன் ஏனெனில் அவன் “Sho is not down in Georgia” என்றான் (அதாவது என்று “Sure is hot” என்று கூறுவதற்குப் பதிலாக ஜார்ஜியாவில் உள்ளவர்களின் பேச்சுவழக்கின்படி “Sho” என்று கூறுகிறான் - தமிழாக்கியோன்). ஜியார்ஜியாவிலும் உஷ்ணமாகத்தான் இருக்கிறது என்று அவன் கூறுகிறான். நல்லது இதைவிட மிகவும் அதிக வெப்பமான இடத்திற்கு போகாதபடி தப்பிக் கொள்வதற்காகத்தான் நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அந்த நோக்கத்தோடுதான் நாம் இங்கே இருக்கிறோம். 6.உங்களெல்லாருடைய தயவுக்காக நண்பர்களே, மிகவும் நன்றி கூறுகிறேன். நீங்களில்லாமல் நான் என்ன செய்ய முடியும்? நீங்களில்லாமல் நான் என்னதான் செய்துவிட முடியும்? என்னை நேசிக்கிறதற்கும் ஒருவரும் இல்லாமற் போகுமானால், செய்திக்கு செவி கொடுப்பதற்கு எவருமே இல்லாமற் போகுமானால், என்னுடைய செய்தியெல்லாம் வீணாய் போய்விடுமே. நான் தொலைபேசிக் கம்பங்களுக்கும், மரங்களுக்கும் பிரசங்கிக்க முடியாது. அவைகள் அதைப் புரிந்து கொள்ளமாட்டா. ஆகவே வந்து செவி கொடுக்கத் தக்கதாக உங்களைப் போல மக்களாக இருக்கவேண்டும். இவ்விதமாக உஷ்ணமான இடத்தில் நீங்கள் வந்து அமர்ந்திருக்கும் பொழுது... என்னுடைய மனைவி இன்று காலையில், தான் சுட்டெரிக்கப்பட்டு விடுவது போல் பின்னால் இருந்ததாகக் கூறினாள். மக்கள், அதிலும் சில சமங்களில் வியாதிப்பட்ட மக்கள், அவ்விதமான கூட்டங்களில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் போது, மகிமையில் தேவன் தாமே உங்களுக்கு ஒரு அழகான வீட்டைக் கொடுக்க வேண்டுமென்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. அவர் அதைச் செய்வார் என்று உறுதியாய் நம்புகிறேன். 7.இப்பொழுது நாம் பார்ப்போமாக. எனது கோட்டை இங்கே யாரோ எடுத்து வைத்துவிட்டார்கள். இன்றிரவில் நான் சிறிது வாசிக்க வேண்டியதிருக்கிறது. இச்செய்தியின் முதல் பாகத்தை எத்தனை பேர் உணர்ந்து மகிழ்ந்தீர்கள்? இவ்வளவு அதிகமாக உஷ்ணமாக இருந்திருக்காவிடில், இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து வெளிப்படுத்தின விசேஷப் புஸ்தகத்தைக் குறித்து நாம் ஆராய்ந்து கொண்டேயிருந்திருக்கலாம். நான் அதை நேசிக்கிறேன். நான் அதிலேயே வாழ்கிறேன். இந்த வாரத்தில் எனக்காக ஜெபியுங்கள், ஏனெனில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை, கர்த்தருக்குச் சித்தமானால், அந்த வாரங்களைப் பற்றிய விஷயங்களை சரியாக அதனுடைய இடத்தில் ஒன்றாக பொருத்தி வைக்க வேண்டும். அதுவோ எனக்கு சற்றும் ஒன்று கூட தெரியாத காரியமாயிருக்கிறது. ஆகவே கர்த்தர் அதற்குரிய பதிலை எனக்குக் கொடுக்கும்படி நான் கர்த்தர் பேரில் நம்பிக்கை கொண்டிருக்கப் போகிறேன். வெவ்வேறு மனிதர்கள் அதைப் பற்றி எழுதியுள்ளவைகளை நான் படித்திருக்கிறேன். டாக்டர் ஸ்கோ பீஃல்ட் என்ற பேரறிஞர் எழுதியுள்ள அடிக்குறிப்புக்களையும் நான் படித்திருக்கிறேன். அவருடைய அநேக அடிக்குறிப்புகளோடு நான் ஒத்த கருத்தை நிச்சயமாகவே கொண்டிருக்க முடியவில்லை. ஏனெனில் அது சரியான சித்திரத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். என்னால் அவைகளில் அப்படிக் காண முடியவில்லை. 8.அது ஒரு சித்திரமானது பல கோணல்மாணலாக வெட்டப்பட்டு, அதை திரும்ப ஒவ்வொரு துண்டுகளையும் சரியாக அதனதன் இடத்தில் வைத்து ஒன்று சேர்த்து அந்த சித்திரத்தை சரியாக மறுபடியும் கொண்டு வரும்படி செய்யும் புதிரைப் போல் (Jigsaw Puzzle) இருக்கிறது. நீங்கள் அவைகளை ஒன்று சேர்க்கும் போது முதலில், “ஓ, இது இங்கே இருக்க வேண்டும்...'' என்று கூறுகிறீர்கள். ''இல்லை, அது அங்கேதான் இருக்கவேண்டும்'' என்று கூறுகிறீர்கள். ஆகவே நீங்கள் அதை ஒன்று சேர்ப்பதற்காக இருக்கையில், அதைச் செய்வதற்காக அதற்கான மாதிரியை நீங்கள் உற்று நோக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்யாவிடில் உங்களுடைய காட்சியானது யாவும் குழப்பமாக கலந்து போய்விடும். அழகான ஒரு கிராமாந்தரக் காட்சியின் சித்திரம் ஒன்று உங்களிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கேயுள்ள ஒரு மரத்தின் மேல் ஒரு பசு மாடு புல் மேய்கிறதாகத் தோன்றும் ஒரு காட்சி அச்சித்திரத்தில் காணப்பட்டால், அது எப்படியிருக்கும்? அந்தக் காட்சி பொருத்தமற்றதாக இருக்கும். ஏனெனில் ஒரு பசு மாடானது ஒரு மரத்தின் மேல் நின்று கொண்டு புல் மேயாது. ஆகவே அதே விதமாகத்தான் வேத வாக்கியங்களிலும், பரிசுத்த ஆவியானவர் அவைகளை ஒன்று சேர்க்காமல் இருந்தால், மீட்பைப் பற்றிய திட்டத்தின் அந்த மகத்தான சித்திரமானது சரியாக கிடைக்காது. அதுதான் நமக்குத் தேவை. சத்தியமே நமக்குத் தேவையாயிருக்கிறது. சத்தியத்தை நாம் அறிகிறவரையிலும், நாம் அதை அப்படியே விட்டுவிடுவோமாக. தேவன் நமக்கு சத்தியத்தை கொடுக்கும் பொழுது, நல்லது அப்பொழுது நான் அதைப் பற்றிப் பேசுவேன். 9.இங்கே சபையில் துவக்க கால முதல் இருந்து வந்த சகோதரன் ராய் ஸ்லாட்டர், இன்னும் சில ஆதிகாலத்து சகோதரர்கள் இங்கே உண்டு. இங்கே இக்கூடாரத்தில் என்னுடைய ஊழியத்தின் முதல் மூன்று அல்லது நான்கு ஆண்டுக் காலக் கட்டத்தில், நான் நரகத்தைப் பற்றிய பொருளின் பேரில் பிரசங்கிக்கவே மாட்டேன். ஏனெனில், அது ஒரு எரிகிற இடமா அல்லது வெறும் ஒரு கல்லறைதானா? என்பதைப் பற்றி என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. வசனத்தில் கல்லறை என்று வருகிற இடத்தில் வாசிக்கும் ஒவ்வொரு தடவையும் அவ்வார்த்தைக்கு உள்ள அர்த்தம் பாதாளம் (Hades) என்பதை நான் அகராதியின் மூலம் பார்த்துக் கொள்வேன். பாதாளம் என்ற வார்த்தைக்கு கல்லறை என்று அர்த்தமாம். ஆகவே நான் அதைப் பற்றி சரியாக அறியாதபடியினால், நாம் என்ன பேசுகிறோம் என்பதைப் பற்றி சரியாக அறிகிற வரையிலும் அதைப்பற்றி பேசாமல் விட்டுவிட்டேன். அதைப் பற்றி கண்டபோது நான் நரகத்தைக் குறித்துப் பேசினேன். எனவே நான் உண்மையாகவே நரகத்தைப் பற்றிய முழுக் காட்சியையும் நானே கண்டு, அது எங்கேயிருக்கிறது என்பதையும் அறிந்த பிறகு தான்... ஒரு ஊழியக்காரன் தன்னுடைய சபைக்கு என்ன பிரசங்கிறானோ அதற்கு அவன் பொறுப்பாளியாயிருக்கிறான் என்று நான் கூற எண்ணுகிறேன். ஏனெனில் அம்மக்கள் அவன் கூறுவதை அப்படியே பற்றிப்பிடித்துக் கொள்ளப் போகிறார்களே, ஆகவே, அப்படியானால், அவர்கள் தவறானதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்படி நான் செய்தால், அத்தவறான உபதேசமானது நிலை நிற்காமல் போகும் வேளை வரும்போது அதைப் பற்றிப் பிடித்து கொள்வதினால் என்ன பயன்? கர்த்தர் சில காலத்திற்கு முன்னால் எனக்கு அத்தரிசனத்தைக் காண்பித்ததில், அங்கே இருக்கிற அந்த இலட்சக்கணக்கானோரில் ஒருவர் என்னிடம், ''நீர் பிரசங்கித்த சுவிசேஷத்தின்படியே நீர் முதலாவதாக நியாயந்தீர்க்கப்படுவீர்“ என்று கூறினார். “பவுலும் ஏனையோரும் பிரசங்கித்த அதே சுவிசேஷத்தையே நானும் பிரசங்கித்திருக்கிறேன்'' என்று நான் கூறினேன். அப்பொழுது, அந்த இலட்சக்கணக்கானோர், ''நாங்கள் அதின் பேரில் தான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்'' என்று ஆர்ப்பரித்தார்கள் அப்படித்தான் அது இருக்கிறது. 10.ஆகவே நான் தொடர்ந்து இன்றிரவு பிரசங்கிக்க விரும்புகிறேன். எனவே அதிக நேரம் நாம் இங்கே தாமதிக்க வேண்டியதில்லை. இப்பொழுது நான் இன்று காலையிலே பேசியவைகளை நீங்கள் மறந்துவிட வேண்டாம். இங்கே என்னிடம் சிறு குறிப்புகள் உள்ளன. இன்று காலையில், சிறையிருப்பில் தானியேலைப் பற்றியும், எதிர்வரும் காலத்தைக் குறித்து அவனுக்கு காபிரியேல் அறிவுறுத்தியவைகளைப் பற்றியும் நான் பிரசங்கித்தேன். எதிர்வரும் காலத்தைப் பற்றியதான அறிவுரைகள் தான் இன்று காலையில் நாம் பெற்றுக் கொண்டோம். இன்றிரவில் நாம், “காபிரியேல் தானியேலைச் சந்தித்ததன் ஆறு விதமான நோக்கங்கள்'' என்ற தலைப்பின் பேரில் பேச போகிறோம். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக் கிழமை எழுபது வாரங்களை அவைகளுக்குரிய கால அடிப்படையில் பொருத்தியும், நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியும் பிரசங்கிக்கப் போகிறேன். அதைக் குறித்து நாம் கண்டுகொண்டு, சரியானபடி உறுதியான முறையில் அதை பார்க்க முடிந்துவிட்டால், நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தினைப் பற்றி திட்டவட்டமாக கண்டு கொள்ள இயலும். அவர் எப்பொழுது வருவோர் என்பதைப் பற்றி நாம் இப்பொழுது அறியோம். ஒருவரும் அதை அறியமாட்டார்கள். இயேசுவே அதை அறியமாட்டார். அவருக்கே தெரியாது என்று அவர் கூறினார். பிதாவுக்கு மாத்திரமே அது தெரியும் என்று கூறினார். தூதர்களும் அதை அறியமாட்டார்கள் என்று கூறினார். அவர் எப்பொழுது வருவார் என்பதை நம்மில் ஒருவரும் அறியமாட்டோம். ஆனால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தைக் குறித்தும் நாம் இன்னும் எவ்வளவு சமீபமாயிருக்கிறோம் என்பதையும் குறித்தும் அறிந்து கூற முடியும். 11.இப்பொழுது நாம் சிறிது திருப்பிப் பார்ப்போம். ஏனெனில் பையன்கள் இவைகளை ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். பதிவு செய்யும் இயந்திரங்கள் பின்னால் உள்ள அறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒலிநாடாக்கள் எவ்விடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இன்று காலையிலுள்ள பாடத்தில், 4-ம், 5-ம் அதிகாரங்களை நாம் பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு, பிறகு நாம் தானியேலின் புஸ்தகத்தின் 9-ம் அதிகாரத்திலிருந்து துவங்கினோம். இப்பொழுது, இன்றிரவில், அந்த 9-ம் அதிகாரத்திலிருந்து தொடர்ந்து பார்க்கப் போகிறோம். அதை நாம் அணுகு முன்னர், நாம் சற்று நேரம் நம் தலைகளை வணங்கி, திருவசனத்தின் ஆக்கியோனிடம் பேசுவோமாக. 12.எங்கள் கிருபையுள்ள தேவனே, எங்கள் இருதயத்தின் அந்தரங்க நோக்கத்தை நீர் அறிந்திருக்கிறீர். நாங்கள் எதற்காக இங்கே இருக்கிறோம் என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர். இன்றுள்ள பிற்பகலில், சற்று ஓய்வெடுத்துக் கொள்வதற்கு இது ஒரு அருமையான இடமாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு நாங்கள் இன்றிரவில் இங்கே வந்திருக்கவில்லை என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர். இங்கே ஒரு நபர் கூட அந்தவிதமான நோக்கங் கொண்டிருக்கவில்லை என்பதை நான் நம்புகிறேன். பிதாவே, ஏற்கெனவே இன்றிரவில் நாங்கள் இங்கே மிக தீவிரமான உண்மையுடனும், உத்தமத்துடனும் வந்திருந்து, கர்த்தர் உரைப்பது என்னவென்றால் என்பதை அறிய ஆவலோடிருக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், உமது திருவசனத்தை நேசிக்கிறோம். எங்கள் தலைக்கு மேல் உள்ள இந்த காங்கரீட் கூரையும், காங்கரீட் பிளாக்குகளினாலும் ஆன இந்த இடத்தை நீர் எங்களுக்கு தந்திருக்கிறீர், நாங்கள் இந்த இடத்திற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இவ்வானத்திற்கப்பால் ஒரு வீடு உண்டாயிருக்கிறது என்றும், அவ்வீட்டிற்குப் போவதற்காகாக நாங்கள் பயணப்பட்டு இருக்கிறோம் என்பதையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். இவ்விதமான சிலாக்கியத்தைக் கூட எங்கள் முற்பிதாக்கள் பெற்றிருக்கவில்லை என்பதையும் நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம். ஆகவே, நாங்கள் எதையாவதைப் பற்றி உம்மிடம் புகார் செய்யக் கூட வெட்கப்படுகிறோம், கர்த்தாவே. இப்பொழுதும், பிதாவே, நீர் எங்களுக்கு இன்றிரவில் வேத வாக்கியத்தைத் திறந்து கொடுக்கும்படி வேண்டிக் கொள்கிறோம். இன்றிரவில் இந்த பாதையிலே நாங்கள் கடந்து செல்லுகையில், நீர் எங்கள் ஒவ்வொருவரும் பக்கத்திலுமாக கடந்து நடந்து வருவீராக. எருசலேமிருந்து எம்மாவூருக்குப் போய் கொண்டிருந்தவர்களோடு நீர் பேசியதைப் போல் நீர் எங்களிடம் பேசியருளும். அதனால் நாங்கள் இன்றிரவில் இவ்வாராதனை முடிவடைந்த பிறகு, நாங்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுகையில், ''அவர் தமது வசனத்திலிருந்து நம்மோடு பேசியபோது நமது இருதயங்கள் கொழுந்துவிட்டு எரியவில்லையா?“ என்று கூறும்படி செய்யும். வேதம் வாசித்தலை ஆசீர்வதித்தருளும், என்னுடைய பெலவீனமான முயற்சிகளை ஆசீர்வதியும், கர்த்தாவே, சரியானவைகளை பேசி என் வாயைத் திறந்தருளும், தவறானவைகளை உச்சரிக்கக் கூடாதபடி என் வாயை மூடியருளும். உமக்கே மகிமையை எடுத்துக் கொள்ளும், உமது ஜனங்கள் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையை அறிந்து கொள்ளவும், கர்த்தராகிய இயேசுவின் அதி சீக்கிர வருகையைக் குறித்தும் காணும்படி செய்து, உமது ஜனங்களில் நீர் மகிமைப்படுவீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறோம் ஆமென். 13.இப்பொழுது, சற்று நேரம்பின்னால் திரும்பிப் பார்க்கத் தக்கதாக, தானியேல் சிறையிருப்பில் அறுபத்தெட்டு ஆண்டுக் காலம் இருந்துவிட்டான் என்று பார்த்தோம். அதைக் குறித்து எண்ணிப்பாருங்கள். இன்று காலையில் கூறப்பட்டவைகளை கேட்டிராதவர்கள், பென்சில், பேப்பர்களோடு உள்ளவர்கள், இவைகளை இன்றிரவில் குறித்துக் கொள்ளுங்கள். கி.பி. 606 முதல் 538 முடிய (கி.மு. என்று இந்த இடத்தில் இருக்க வேண்டும். வாய் தவறுதலாக இந்த இடத்தில் கி.பி. என்று கூறிவிடுகிறார் - தமிழாக்கியோன்). 538 முதல் 606 முடிய அறுபத்தெட்டு ஆண்டுக் காலமாகும் இக்கால முழுவதிலும் தானியேல் சிறைப்பிடிக்கப்பட்டவனாக போவதற்கு அவனுக்கு எந்தவொரு சபையும் இல்லாத நிலையில், கேட்க அவனுக்கு எந்த பிரசங்கமும் இல்லை என்ற இவ்விதமான நிலையில் இருந்து வந்தான். ஆனால் அவனிடம் அவனுக்கு முன்னால் தோன்றிய ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக முன்னுரைத்தவைகளைப் பற்றி எழுதியுள்ள புஸ்தகங்களும், தோற்சுருள்களும் இருந்தன. அதுதான் எரேமியாவாகும். 14.ப்பொழுது அவன் இந்த வேதவாக்கியங்களை படித்து ஆராய்ந்து கொண்டிருக்கையில், அவர்களுக்கென குறிக்கப்பட்டு இருந்த எழுபது ஆண்டுகளின் காலம் வேகமாக முடியப் போகிறதாயிருக்கிறது என்பதைப் பார்த்தான். எரேமியா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக உரைத்த ஒவ்வொரு வார்த்தையையும் தானியேல் பயபக்தியுடன் விசுவாசித்தான். இன்றிரவில் இப்பாடத்தை கேட்டுக் கொண்டிருக்கும் இந்த என் ஜனங்களைக் கேட்கிறேன், நாம் நமது தீர்க்கதரிசிகளை விசுவாசிக்க வேண்டுமா? ஆம், ஐயா! ஏனெனில் கர்த்தருடைய வார்த்தையானது தீர்க்கதரிசிகளிடத்தில் தான் வந்தது. அவர்களுக்கு ''கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்“ என்பதாக இருந்தது. மற்றொரு உண்மையான தீர்க்கதரிசி கூறுபவைகளோடு ஒரு உண்மையான தீர்க்கதரிசி முரண்பட்டிருக்கவே மாட்டான். வார்த்தை கூறாதவைகளை, வார்த்தையில் கூறப்பட்டிராததை அவர்கள் செய்யவே மாட்டார்கள். அதுதான் அவர்களை ஒரு தீர்க்கதரிசியாக ஆக்குகிறது. அவர்களுக்கு வார்த்தை வரும்பொழுது, என்ன சம்பவிக்க வேண்டுமோ அதை அவர்கள் முன்னுரைப்பார்கள். தாங்கள் எதையாவது தவறானதை கூறிவிடக் கூடாதே என்றும், அதினால் அது வழிதப்பிச் செல்லச் செய்துவிடக் கூடுமே என்றும் அறிந்து உள்ளத்தில் பய உணர்வோடு, தாங்கள் ஒருக்காலும் அப்படிபட்ட காரியத்தை செய்ய விரும்புவதே கிடையாது. கர்த்தர் உரைப்பது என்னவென்றால் என்று கூறும் முன்னர், கர்த்தருடைய வார்த்தையைத் தான் நாம் பெற்றிருக்கிறோம் என்ற முழு நிச்சயத்தை உடையவர்களாக இருக்கவே நாம் விரும்புகிறோம். அது தேவனுடைய சிங்காசனத்தில் இருந்து நேரடியாக புறப்பட்டு வரக்கூடிய முழுமையான, நேரடியான செய்தியாக இருக்கவேண்டும். அப்படி இல்லையெனில் நாம் அதைப் பற்றிப் பேசவே கூடாது. 15.இப்பொழுது, நாம் வேத வாக்கியங்களை ஆராய்கையில், தானியேல் சிறையிருப்பில் அறுபத்தெட்டு ஆண்டுகள் இருந்துவிட்டபடியினால் இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் மீதமாயிருக்கிறது என்றும், காலமானது வேகமாக கடந்துவிட்டது என்றும், தேவன் தன் ஜனங்களை அவர்களுடைய சுய தேசத்திற்கு திரும்பக் கொண்டு செல்லப் போகிறார் என்பதையும் அவன் கண்டான் என்றும் பார்த்தோம். ஜெபத்தில் இருந்தபொழுது, பரலோகத்திலிருந்து பலமுள்ள தூதனொருவன் இறங்கி வந்தான் என்பதையும் நாம் கண்டோம். அவனுடைய பெயர் இன்னதென்று யாராவது கூற முடியுமா? (சபையினர் ''காபிரியேல்'' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). காபிரியேல் அவன் யூத சபைக்கு உரிய தூதனாயிருக்கிறான். எத்தனை பேருக்கு அது தெரியும்? எங்கும் காபிரியேல் தான் என்பதைப் பார்க்கிறோம். காபிரியேல் தான் யூத சபைக்குரிய செய்தியாளனாக இருக்கிறான். அவன் மரியாளிடத்தில் வந்தான், சகரியாவினிடத்தில் வந்தான். எப்பொழுதும் அது காபிரியேல் தான். பரலோகத்தின் மிகப்பெரிய தூதர்களில் அவனும் ஒருவன். 16.அவன் நமது சகோதரனாகிய தானியேலுக்கு தேவனிடத்திலிருந்து “ஓ, தானியேலே நீ மிகவும் பிரியமானவன்” என்ற அப்படிப்பட்ட அற்புதமான வாழ்த்துதலை கொண்டு வந்தான். அல்லவா? தேவன் உங்களை நேசித்தார் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கத் தக்கதாக அது உங்களை ஆக்காதா? நான் பெரிதான அளவில் நேசிக்கப்படவில்லையெனில், ஒரு சிறிதாவது நாம் நேசிக்கப்பட வேண்டுமே என்று நான் விரும்புவேனே, நீங்கள் அவ்வாறு எண்ணவில்லையா? எப்பொழுதாவது அவர் என்னைக் குறித்து நினைக்கிறார். அவர் எனக்காக அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை நான் எண்ணிப் பார்த்தால், அதற்காக நான் ஆர்ப்பரிக்க விரும்புவேன். அவர் நமக்காக அக்கறை கொண்டிருக்கிறார் என்பதற்கான உறுதியான வாக்குறுதி நமக்கு உண்டாயிருக்கிறது. ஏனெனில் நாம் இன்னும் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமது ஸ்தானத்தில் மரித்தார், சகோதரனே. நாம் தேவனுக்கு அந்நியர்களாயிருக்கையில், தேவன் நம்மை இப்பொழுது தமக்கு அருகாமையில் நாம் வரும்படி செய்து, நமக்கு நமது இரட்சிப்பின் அச்சாரமாகிய பரிசுத்த ஆவியை தந்திருக்கிறார். அதின் பேரில் உள்ள விசுவாசமானது. இவ்வுலகத்தின் காரியங்களுக்கு மேலாக நம்மை உயர்த்துகிறது, அதற்கு மேலாக நாம் தாண்டிச் சென்றுவிடுகிறோம். அது மகிமையானதாக இருக்கிறதல்லவா? அது சரி. 17.ஜெபத்தில் இருக்கையில், காபிரியேல் வந்து, அவனிடம், அவர்கள் தங்கள் சுய தேசத்திற்குப் திரும்பிப் போவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது என்பதைப் பற்றி மட்டுமல்லாமல், அந்த மக்களின் முடிவு காலம் வரைக்கு முள்ள விஷயத்தையும் பற்றி அவனுக்கு கூறினான். அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். இப்புவியில் அவர்கள் கடந்து செல்லப்போகிற யாத்திரையின் இறுதிவரையிலும் உள்ள முழுக் காலத்தையும் காபிரியேல் தானியேலுக்கு விவரித்தான். இம்மகத்தான காரியங்களை தானியேலுக்குக் கூறும்படியாகத்தான் அனுப்பட்டதாக அவன் கூறினான். அந்த தீர்க்கதரிசி எப்படியாய் உணர்ந்திருப்பான்! முடிவு காலம் வரையிலும் அவனுடைய ஜனங்களின் மேல் எழுபது வாரங்கள் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவன் எடுத்துக் கூறினான். எல்லாம் முடிகிறதான அப்பொழுதுதான் முடிவுகாலமாக இருக்கிறது. சகலவற்றின் முடிவு. எல்லாவற்றின் முடிவும் வருகிற அம்முடிவுகாலம் வரையிலும் எழுபது வாரங்கள் உள்ளன என்று அவன் கூறினான். சிலர் மாதங்கள் என்று எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் நாட்கள் என்று எடுத்துக் கொள்கிறார்கள். சிலர்... அவைகள் வாரங்கள் என்று கூறப்பட்டுள்ளன. சுமாராக இரண்டேகால் வருடங்கள்... அல்லது ஒன்றேகால் வருடங்கள் ஆகும். பாருங்கள், அங்கே தான் நாம் உண்மையானவற்றைக் கண்டு கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். 18.“எழுபது வாரங்கள் உன்னுடைய ஜனங்கள் மேல் செல்லும்படி குறிக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டது. எந்த நோக்கத்திற்காக? எதற்காக? யாருடைய ஜனங்களின் மேல். என்னத்திற்காக? எதற்காக யாருடைய ஜனங்களின் மேல் தீர்மானிக்கப்பட்டது? யூதர்களாகிய தானியேலின் ஜனங்களின் மேல். என்ன பரிசுத்த நகரம். இப்பொழுதும் சபையோரே, தானியேலின் பரிசுத்த நகரம் எது? (சபையோர் ”எருசலேம்'' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). எருசலேம். இப்பொழுது, இன்றிரவில், எருசலேம் எங்கேயுள்ளது அதை கட்டியெழுப்பியது யார்? என்பதைப் பார்க்கப் போகிறோம். அதைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? யார் எருசலேமைக் கட்டியெழுப்பினார்கள்? எப்பொழுது அது ஸ்தாபிக்கப்பட்டது? சற்று நேரத்திற்குப் பிறகு நாம் அதைப் பார்க்கப் போகிறோம். எருசலேமை கட்டியெழுப்பியது யார்? அது ஒரு மூலையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சிறு காரியமாகும். ஆனால் நிச்சயமாக அது அதை கூறுகிறது. ஆம் ஐயா! எருசலேமை நிறுவியது யார்? எப்பொழுது அது நிறுவப்பட்டது? நல்லது? அது தானியேலின் பரிசுத்த நகரம். 19.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சாபக்கேடாக இருந்து வந்த அந்த நகரமானது இப்பொழுது மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டு, ஆதியில் இருந்ததைப் போலவே ஆலய வழிபாடும் அங்கே ஏற்படுத்தப்படும் என்பதை நாம் அறிகிறோம். அது சரிதான். எருசலேமில் அவ்விதமாக நடக்கும். அங்கே ஆதியில் இருந்ததைப் போலவே, அன்றாட பலியானது மீண்டும் ஏற்படுத்தப்பட்டு, அது செலுத்தப்படும். இன்றிரவில் அவைகளைப் பற்றிய அநேக காரியங்களை நாம் பார்க்கப் போகிறோம். 20.இவைகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் நண்பர்களே, நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில், வாரங்கள் கணக்கில் உள்ள போதித்தலை நான் செய்யப் போகிறதில்லை; ஆனால் அவைகளைப் பற்றி சற்று தொட்டு பேசப் போகிறேன். ஆனால் பின்னால் சீதோஷ்ண நிலை சற்று குளிர்ச்சியடைந்த பிறகு, நாம் அந்த ஏழு முத்திரைகள், ஏழு கோப கலசங்கள், ஏழு எக்காளங்கள் ஆகியவைகளைப் பற்றி நாம் படிக்கும் போகும் போது, அப்பொழுது நான் முன் சொன்னவைகளைப் பற்றி திரும்பிப் பார்த்து, “தானியேலின் எழுபது வாரங்களைப் பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா? சபைக் காலமானது முடிந்து சபை மேலே எடுக்கப்பட்டபொழுது என்ன சம்பவித்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?'' என்று கேட்டு முன் சொன்னவைகளை நினைவுக்கு கொண்டு வருவேன். எழுபதாவது வாரமானது, சபையானது மேலே எடுக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்து, அது திரும்ப வருகிற வரையிலும் உள்ள காலத்தைக் கொண்டதாக இருக்கிறது. அந்த காலத்தைத்தான் அது உள்ளடக்கியதாக இருக்கிறது. தானியேலின் முழு எழுபது வாரங்களையும் அல்ல. அதன் ஒரு பாகத்தைத்தான். 21.''எழுபது வாரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது'' என்ன நடக்கப் போகிறது என்பதை கூறுவதான ஆறு விதமான நோக்கங்கொண்டதாக காபிரியேலின் விஜயமானது இருந்தது. அவனது வருகைக்கு ஆறு விதமான நோக்கங்கள் இருந்தன. இன்று காலையில் நாம் எடுத்துக் கொண்ட வேத வாக்கியத்தை மீண்டும் எடுத்துக் கொள்ளப் போகிறதில்லை. அங்கே ஆறுவிதமான நோக்கங்கள் இருந்தன. இங்கே நாம் இருக்கிறோம் ஆறு விதமான நோக்கங்கள் இருந்தன என்பதை நாம் கண்டோம். அவற்றில் ஒன்று... நாம் இப்பொழுது தானியேலின் புஸ்தகம் 9-ம் அதிகாரம் 24-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். ''...உன் ஜனத்தின் மேலும், உன் பரிசுத்த நகரத்தின் மேலும் எனவே இந்த எழுபது வாரங்கள் - இதை நீங்கள் காணத் தவற வேண்டாம் - அந்தக் காலத்திலிருந்து, யூதர்களுடைய முடிவு காலம் வரையிலும் எருசலேமின் முடிவு வரைக்கிலும் கூட அது வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது - அப்பொழுது புதிய நகரமொன்று கட்டப்படும். மிகவும் ஆழமான விஷயத்திற்குள் நாம் இன்றிரவில் செல்லுகிறோம் என்று நான் நம்புகிறேன் மீறுதலைத் தவிர்க்கிறதற்கும்... எழுபது வாரங்கள் சொல்லும்படி குறிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - இந்த அளவு காலம் தான் இஸ்ரவேலர் இப்பூமியில் செய்ய வேண்டிய யாத்திரையாகும். அவர்களுக்கு எழுபது வாரங்கள் மட்டும்தான் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு காலம் தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 22.இப்பொழுது அவன் அவனிடம் என்ன கூறினான்? அவன் இன்னும் எவ்வளவு காலம் செல்லும் என்பதைக் குறித்து கண்டு பிடிக்க அவன் முயன்று கொண்டிருந்தான். (தானியேல் அவ்வாறு செய்தான் - தமிழாக்கியோன்). “நாங்கள் கடைசி காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை நான் அறிகிறேன், கர்த்தாவே'' என்று அவன் ஜெபித்தான். (இப்பொழுது நாம் இருக்கிறது போல்). இங்கு கூடி வந்திருக்கிறவர்களில் எத்தனை பேர்கள் நாம் கடைசி நாட்களில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை விசுவாசிக்கிறீர்களோ, அவர்கள் யாவரும் “ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையோர் ”ஆமென்“ என்று கூறுகிறார்கள் - ஆசி). உங்களுக்கு நன்றி. நாம் முடிவுக்காலத்தில் இருக்கிறோம். நாம் இப்பொழுது, தேவனுடைய உதவியைக் கொண்டு, இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதைக் குறித்து கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறோம். என்ன நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? எனவே தான் நாம் பின்னால் திரும்பிச் சென்று இந்தத் தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்களை எடுத்துக்கொண்டு, நாம் எங்கே இருக்கிறோம் என்பதை கண்டு கொள்ள முயன்று கொண்டிருக்கிறோம். அதை தானியேலும் செய்தான். அவன் தன் முகத்தை தேவனுக்கு நேராகத் திருப்பினான். 23.இன்று எத்தனை பேர்கள் தானியேல் 9-ம் அதிகாரத்தை வாசித்தீர்களா? உங்கள் கரங்களை உயர்த்திக் காண்பியுங்கள். நல்லது அவனுடைய ஜெபத்தைப் பாருங்கள், அவன் எவ்வாறு தன்னுடைய பாவ அறிக்கையையும் தன் ஜனங்களுடைய சார்பில் தானே அவர்களுடைய பாவ அறிக்கையையும் செய்தான் என்பதைப் பாருங்கள். தாங்கள் எப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டியதாய் இருக்கும் என்பதைக் குறித்து திட்டவட்டமாக கண்டுகொள்ள அவன் விரும்பினான். ஏனெனில் அவன் தன் ஜனங்கள் திரும்பிப் போவதற்கு ஆயத்தப்படுத்த வேண்டுமென அவன் விரும்பினான். எப்பொழுது நாம் உன்னதத்திற்குப் போகப் போகிறோம் என்பதைக் கண்டு கொள்வதற்காகாவே நான் முயன்று கொண்டிருக்கிறேன். அதனால் ஜனங்கள் மேலே போவதற்கு அவர்களை ஆயத்தப்படச் செய்வதற்காகத்தான். நாம் ஆயத்தமாயுள்ளோமா? ''கர்த்தாவே, என்ன நேரத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்பதை கண்டுபிடிப்பதற்காக நாம் நம்முடைய முகங்களை ஜெபங்களிலும், வேண்டுதல்களிலும் தேவனை நோக்கித் திருப்பியிருக்கிறோம். 24.நாம் பல்வேறு காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கிறதை கண்டிருக்கிறோம். உலகமானது மிகவும் ஒழுங்கற்று சர்வ குழப்பான நிலையில் காணப்படுகிறது. நேரமானது நெருங்கிவிட்டது என்று நாம் காண்கிறோம். சுவற்றிலே ஒரு கையுறுப்பு தோன்றியுள்ளது. தேவன் முன்னுரைத்த யாவுமே... இப்பொழுதே இன்னொரு யுத்தம் வரப்போகிறது என்று நமது ஜனாதிபதி கூறுகிறதை நாம் கேட்கிறோம். யுத்தம் என்று அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் உலக நாடுகள் எரிமலை வெடித்து, அதிலிருந்து சிதறும் சாம்பலைப் போல் ஆகிவிடும் என்று முன்னுரைக்கப்படுகிறது. நாம் அதைப் பெற்றிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். ஆகவே, அது சம்பவிக்கிறதற்கு முன்பாக, சபையானது இங்கிருந்து போய்விட வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறோம். ஆகவே, கர்த்தாவே நாங்கள் எந்த வேளையில் இருந்து கொண்டிருக்கிறோம்? எனவே அக்காரணத்தினால் தான் அவர் நமக்கு அதைத் தெரியப்படுத்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன். அதைக் கண்டுபிடிப்பதற்காக நாம் நமது முகங்களை திருப்பியிருக்கிறோம். இப்பொழுது முதலாவதாக “மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின் மேலும் உன் பரிசுத்த நகரத்தின் மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.'' தானி.9:24 அந்த ஆறுவிதமான நோக்கங்களோடு தான் காபிரியேலின் விஜயம் உண்டாயிருந்தது. இப்பொழுது நாம் முதலாவதாக அந்த நோக்கத்தை பார்க்க துவங்குவோமாக. அதை நீங்கள் பென்சில் வைத்திருந்தீர்களானால் குறித்துக் கொள்ளுங்கள். மீறுதலைத் தவிர்க்கிறதற்கு - அதுதான் முதலாவதான காரியமாகும். 25.தேவனுக்கு விரோதமாக மீறுதலைச் செய்த இஸ்ரவேலின் மீறுதலைத் தவிர்க்கிறதற்கு என்றால், யாக்கோபிலிருந்து அவபக்தியை நீக்குவதாக அது இருக்கும். இப்பொழுது நாம் இதைப் பற்றி தெரிந்து கொள்ளுவதற்காக ரோமருக்கு எழுதிய நிருபம் 11-ம் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, 21-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். இப்பொழுது நாம் எதைப் பார்க்கப் போகிறோம்? மீறுதலைத் தவிர்க்கிறதற்கும் என்கிற விஷயத்தைக் குறித்து ரோமர் 11:21. சுபாவக் கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க.... (இது யார் இஸ்ரவேலர்)... உன்னையும் தப்பவிடமாட்டார்... நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் சென்று இந்த 11-ம் அதிகாரம் முழுவதையும் வாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் இதை வாசிக்கிறேன். இந்த 11-ம் அதிகாரத்தைக் குறித்துக் கொண்டு படியுங்கள் ...உன்னையும் தப்பவிட மாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்தில் கண்டிப்பையும், உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டு போவாய். அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்ட வைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்ட வைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே. (புறஜாதிகள் வெட்டப்பட்டு, இஸ்ரவேலர் மீண்டும் ஒட்ட வைக்கப்படப்போகிற ஒரு காலமானது உண்டாயிருக்கும் என்று இவ்வசனம் கூறுகிறது - பார்த்தீர்களா?). சுபாவத்தின்படி காட்டொலிவ மரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, (புறஜாதிகள்) சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்ட வைக்கப்பட்டிருந்தால்... நாம் சுபாவத்திற்கு விரோதமானவர்கள், அந்நியர்கள், இரக்கம் பெற்றிராதவர்கள் தேவனற்றவர்கள், நம்பிக்கையற்றவர்கள்; தேவனோ தம்முடைய இரக்கத்தினாலே நமக்கு ஒரு வாய்ப்பை அருளினார், நீதியைப் பெற்று இஸ்ரவேலரையோ அவர்களுடைய மீறுதல்களினிமித்தம் வெட்டிப்போட்டு, புறம்பாக்கிப் போட்டார்; காட்டொலிவ மரத்தை சுபாவத்திற்கு விரோதமாக சுபாவக் கிளையில் ஒட்ட வைத்தார். சுபாவக் கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? ரோமர் 11: 21 நல்லது, நாம் தொடர்ந்து வாசிப்போமாக. மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்கு கடினமான மனதுண்டாயிருக்கும். 26.புறஜாதியாருடைய காலத்தை தேவன் முடித்து வைக்கிற வரையிலும், இஸ்ரவேலர் குருடாக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் பாவத்திற்குள் சென்று, தேவனுக்கு விரோதமாக மீறுதல்களுக்குள் சென்றார்கள், ஏனெனில் தேவன், நாம் ஒட்ட வைக்கப்படுவதற்காக அவர்கள் கண்களை குருடாக்கினார். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது 26-ம் வசனம்: ''இந்தப் பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்...“ உங்களுக்காகவும் எனக்காகவுமே தேவன் அவர்களை குருடாக்கினார். அவர்களை தேவன் குருடாக்கினபடியால் அவர்களால் காணமுடியாது. இஸ்ரவேலர் அனைவரும், உண்மையான இஸ்ரவேலர் அனைவரும், இரட்சிக்கப்படுவார்கள். தூதன் என்ன கூறினான்? மகிமை? “இஸ்ரவேலரின் மீறுதல்களை தவிர்க்கிறதற்காக. இஸ்ரவேலரின் மீறுதல்கள் தீர்க்கப்படப் போகிற வேளையானது வரப்போகிறது என்பதை உனக்குக் கூறவே நான் வந்தேன்” என்று கூறினான். தேவன் காட்டொலிவக் கிளைகள் வெட்டியெறிந்துவிட்டு அந்த இடத்தில் சுய ஒலிவ கிளைகளை மீண்டும் ஒட்டவைப்பார். ஓ! சில சமயங்களில் அந்த பரிதாபமான நிர்ப்பாக்கியத்திற்குரிய, தாங்கள் எங்கே போகிறோம் என்பதையே அறியாதபடி வெட்டிப் புறம்பாக்கப்பட்ட அந்த மக்களை காண்கையில், என் உள்ளத்தை அது குலுக்குகிறது. நான் இரட்சிக்கப்படும்படியாக தேவன் அவ்வாறு அவர்களுக்குச் செய்தார். அவர்கள் கண்களை அவர்களுடைய சொந்த மேசியாவிடமிருந்து குருடாக்கினார்; அவர் சத்தத்தைக் கேட்கக் கூடாதபடி அவர்களுடைய காதுகளை அடைத்தார்; அவருடைய அற்புதங்களை அவர்கள் கண்ணோக்கிப் பார்த்தனர்; அவர் செய்த அற்புதங்களை அவர்கள் ஏறெடுத்துப் பார்த்தும், அவர் செய்தவைகளையெல்லாம் பார்த்தும் கூட, இவ்வாறாயிற்று. 27.மத்தேயு 12-ம் அதிகாரம் அல்லது 8-ம் அதிகாரம் அல்லது 12-ம் அதிகாரம் என்று நினைக்கிறேன், அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ''அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை'' (இவ்வசனம் யோவான் 12:37-இல் உள்ளது - தமிழாக்கியோன்). “ஏனெனில் தேவன் அவர்கள் கண்களினால் காணாமலும் இருதயத்தினால் உணராமலும் குணப்படாமலும் இருக்கும் படிக்கும்... அவர்கள் கண்களை அவர் குருடாக்கி அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்'' என்று கூறியுள்ளார். (யோவான் 12:40). ஆனால், நமக்கு ஒரு தருணம் கிடைக்கத் தக்கதாக, அவர் தன் சொந்தப் பிள்ளைகளின் கண்களுக்கு நேராக திரையிட்டுவிட்டார்; மேசையிலிருந்து தன் சொந்தப் பிள்ளைகளைப் புறம்பாக்கி போட்டார்; ஆவியில் நலிந்து போகுதலையே தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்; அதினால் நமக்கு ஜீவனைக் கொடுத்து, நாம் பிழைத்திருக்கும்படி செய்தார். மீண்டும் 26-ம் வசனம்: இந்தப் பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார்கள் என்றும்: ரோமர் 11:26. ஆம் இந்நாட்களில் ஒன்றில் அவர் சீயோன் மலைக்கு வருவார். ஒலிவ மலையின் மேல் வருகையில் அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளுவார்கள். இஸ்ரவேலரெல்லாரும் அது அவர்தான் என்று அடையாளம் கண்டுகொள்வார்கள். அப்பொழுது புறஜாதியாரின் காலம் முடிவடைந்து விட்டிருக்கும். ஒட்ட வைக்கப்பட்ட அந்த கிளைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கனிகளை தேவன் எடுத்துக் கொள்வார், அந்த காட்டொலிவக் கிளைகளையோ தேவன் வெட்டிப் போடுவார். 28.இதற்கு முன்னால் உள்ள வசனங்களை நீங்கள் வாசித்தீர்களானால் அங்கே... வேரானது பரிசுத்தமாயிருந்தால், “கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்'' (ரோமர் 11:16). அப்பரிசுத்த வேரிலிருந்து வரும் கனியையும், பரிசுத்த கனியாகத்தான் புறப்பட்டு வரும். அந்த வேரானது இயேசு கிறிஸ்துவாயிருந்தால் - அவர் தாமே தாவீதின் வேரும் சந்ததியுமாயிருக்கிறார் - அவரிலிருந்து அந்த ஜீவனானது யூத சந்ததியின் மூலம் வருகிறதாயிருந்தால், அது அவர்களிலிருந்து வெட்டப்பட்டது. நாம் காணும்படியாய் அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டன. நமது ஜீவியங்கள் அவ்வாசீர்வதிக்கப்பட்ட கிளையைப் போலவே இருக்கவேண்டும். ஓ ஆம், சகோதரனே! அது சரிதான். 29.நாம் காண்பதற்காக வாய்ப்பைப் பெறும்படியாகவும், நமக்கு ஒரு தருணம் கிடைக்கும்படியாகவும், தேவன் அந்த நோக்கத்திற்காகவே அவர்களை வெட்டிப்போட்டு, அவர்களுடைய கண்களை குருடாக்கிப் போட்டார். ஆனால் நாமோ, நம்மைப் பெரிதாக நினைத்துக் கொண்டு நடந்து திரிகிறோம். அதை நீங்கள் எவ்வாறு செய்கிறீர்கள் என்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று பவுல் அவர்களுக்குக் கூறுகிறான். ''சுபாவக் கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க... காட்டொலிவக் கிளையின் மேல் எவ்வாறு இனிமேலும் இரக்கமாயிருப்பார்? அது ஏற்கெனவே...'' எனவே, நாம் சுற்றித்திரிந்து, ''நான் ப்ரெஸ்பிட்டேரியன், நான் மெத்தோடிஸ்ட், நான் பாப்டிஸ்ட், நான் பெந்தெகொஸ்தேக்காரன்'' என்றெல்லாம் பெருமையடித்துக் கொண்டு திரிகிறோம். தேவனுக்கு அவைகள் ஒன்றுமில்லை. நீங்கள் பரிசுத்த ஆவியினாலே மறுபடியும் பிறக்கவேண்டும், அதுதான் வேரிலிருந்து வருகிறதாயிருக்கிறது. ஆனால் அவர் வருகிறார்... இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவர் புறஜாதிகளை குறித்து பேசவில்லை. நான் இதை அங்குமிங்குமாக அலசி நான் இவைகளைப் பேசினேன், ஏனெனில் புறஜாதியாருக்கு வாய்ப்பு எங்கேயுள்ளது என்பதை நீங்கள் காணத் தக்கதாகத்தான். ஆனால் அவர் மீறுதலுக்கு முடிவுண்டாகும் படியாக வருகிறார். 30.இப்பொழுது நாம் தானியேலுக்கு திரும்பிச் சென்று அங்கே 24-ம் வசனத்தில் காணலாம்... ''மீறுதலைத் தவிர்க்கிறதற்கும்...'' எதைத் தவிர்க்கிறதற்கும்? இஸ்ரவேலுடைய மீறுதலைத் தவிர்க்கிறதற்குத் தான். மீறுதல் என்பது என்ன? ஒன்றுக்கு எதிராக ஒன்றைச் செய்வது தான். எனக்கு எதிராக மீறுதல் என்பது எனக்கு ஒரு தவறிழைப்பதுதான். உங்களுக்கெதிராக மீறுதல் என்றால், உங்களுக்கு எதிராக தவறிழைப்பதுதான். எனவே, இஸ்ரவேல் தேவனுக்கு எதிராக தவறிழைத்தது. இந்த எழுபதாவது வாரத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது? இஸ்ரவேலின் மீறுதலை தேவன் தவிர்க்கப் போகிறார். ''மீறுதலைத் தவிர்த்தல் என்றால் யாக்கோபிலிருந்து அவபக்தியை நீக்குவதாயிருக்கும். அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் மறுபடியும் பிறந்திருப்பார்கள். அவர்கள் யாவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வார்கள். 31.இரண்டாவதாக: உங்களுடைய காகிதத்திலே இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அந்த விஷயத்தின் பேரில் நாம் அதிக நேரம் தங்கியிருக்கலாம். ஆனால் நான் அதின் பேரில் பிரசங்கம் நிகழ்த்த விரும்பவில்லை. நீங்கள் அதை மிகவும் நெருக்கமாகப் பெற்றுக் கொள்ளும்படியாக நான் பேச விரும்புகிறேன். நாம் இந்த ஏழு முத்திரைகளைப் பார்க்கப் போகும் போது, அப்பொழுது, சபைக் காலம் பூராவிலும் பார்த்து, முத்திரைகள், வாதைகள் இவற்றின் வழியாகப் பார்த்துக் கொண்டே வந்து, நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதையும் அறிந்து கொள்வோம். இரண்டாவது: பாவத்தைத் தொலைக்கிறதற்கும். இப்பொழுது அதை மீண்டும் தானியேலில் வாசிப்போம். ''மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவத்தைத் தொலைக்கிறதற்கும் அவரது வருகையின் இரண்டாவது நோக்கம். முதலாவதாக இஸ்ரவேலுடைய மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பிறகு பாவத்தைத் தொலைக்கிறதற்கு இஸ்ரவேல் எங்கே பாவம் செய்தது? அவர்கள் எங்கே தங்களுடைய முக்கியமான பாவத்தைச் செய்தார்கள்? எங்கே அவர்கள் தேவனை விட்டு தங்களையே புறம்பாக்கிக் கொண்டனர்? 32.இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். நாம் இப்பொழுது மத்தேயு எழுதிய சுவிசேஷம் 24-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம். இங்கே தான் இஸ்ரவேலானது தன்னுடைய மிக மோசமான தவறை இழைத்தது. இங்கே தான் அது தன்னுடைய கடைசியான பாவத்தைச் செய்தது. அவள் இன்றைக்கு இருக்கக் கூடிய நிலைக்கு அதுவே காரணமாகும். மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27-ம் அதிகாரம் 25-ம் வசனம். 21-ம் வசனத்திலிருந்து துவக்குவோம். தேசாதிபதி ஜனங்களை நோக்கி: அவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள் பாரபாசை என்றார்கள். அப்படியானால் கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்... அதற்கு அவர்கள் பரபாசை என்றார்கள் (அவ்வாறு கூறியது இஸ்ரவேலர் என்பது உங்களுக்கு நினைவிலிருக்கட்டும்). பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால் கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டான். (அவர்கள் கூறப் போவதை கவனித்துக் கேளுங்கள்) அவனைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள்... இப்பொழுது உங்களுக்கு நினைவிருக்கட்டும்; அவர் அவர்களுடைய மேசியாவாகும். அவர் வரப் போதாக தானியேல் கூறியிருந்தான். இன்று காலையிலுள்ள பாடத்தில் அவர் தமக்காக, அல்ல, அவர் எந்தத் தவறும் செய்யாததற்காக கொலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டது நினைவிலிருக்கட்டும்... அவனைச் சிலுவையில் அறைய வேண்டும்... தேசாதிபதியோ: ஏன் என்ன பொல்லாப்பபுச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்; அவனைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி ஜனங்களுக்கு முன்பாகக் கைகளை கழுவி; இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றான். மத். 27: 21-24 கவனியுங்கள்! இங்கே தான் அவர்களுடைய குற்றம் இருக்கிறது. இங்கேதான் அவர்களுடைய பாவம் இருக்கிறது. அதற்கு ஜனங்களெல்லாரும்; இவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். மத். 27:25. 33.அங்கே தான் அந்தக் காரியத்தை அவர்கள் செய்தார்கள். அவர்களுடைய பாவத்தை அவர் தொலைத்துக் கொண்டிருந்தார். நாம் உள்ளே வருவதற்காக வேண்டி அவர்களுடைய கண்களை அவரே குருடாக்கினபடியால், அவர்களை மன்னிப்பதைத் தவிர அவரால் வேறு என்ன செய்ய முடியும்? அவருடைய சொந்த பிள்ளைகளே அவரது இரத்தத்தை சிந்துவதற்காக கூக்குரலிட்டதாக அது இருந்தது. அவர்கள் குருடாக்கப்பட்டார்கள். அவர்கள் குருடாக்கப்பட்டிருந்தார்கள் என்பது அவருக்குத் தெரியும். அக்காரணத்தினால்தான் அவர் அவர்களுடைய மன்னிப்பை அவர்களுக்காக வேண்டினார். ''பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்“ (லூக்கா 23:34). அவர்கள் குருடாயிருந்தனர். நமது நிமித்தமாகவே அவர்கள் குருடாக்கப்பட்டனர். அவர்களுடைய அவிசுவாசத்தினாலே அவர்கள் இவ்வாறு செய்தனர். ஆனால் அவர்கள் அவரை மீண்டும் காண்கையில்... ஆமென்! 34.பாவத்தை முடிவு கட்டுவதற்காக. பாவம் என்பது என்ன? அது அவிசுவாசமாகும். அவர்தான் மேசியா என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. அவர் மேசியா என்று அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை. ஆயினும் மேசியா வந்தால் என்னென்ன அடையாளத்தை எல்லாம் செய்வார் என்று கூறப்பட்டதோ அதையெல்லாம் அவர் அப்படியே செய்தார். ஆனால் அவர்களால் அதைப் பார்க்க இயலவில்லை. அவர்கள் குருடாயிருந்தனர். ஆகவே, மக்கள், ''தெய்வீக சுகமளித்தலை நான் விசுவாசிக்கமாட்டேன். என்னால் அதைக் காண முடியவில்லை. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை என்னால் நம்ப முடியவில்லை'' என்றெல்லாம் கூறினார்களென்றால், அவர்கள் பேரில் நீங்கள் கோபப்பட வேண்டாம். அவர்கள் குருடாயிருக்கிறார்கள். ''அவரது வருகையைப் பற்றிய இந்தச் செய்தியை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து என்னால் கண்டுகொள்ள முடியவில்லை; இந்த சர்ப்பத்தின் வித்து உபதேசத்தை என்னால் நம்ப முடியவில்லை இந்தக் காரியத்தை என்னால் காண முடியவில்லை'' என்றெல்லாம் மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் குருடராயிருந்து, அதை அறியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள். 35.அவர்களுடைய அவிசுவாசத்திலே... ஆனால் அவர் மீண்டும் வருகையில் அவர்கள் அவரைக் காணும் போது, அது அவர்களுடைய அவிசுவாசத்திற்கு ஒரு முடிவு கட்டிவிடும். ஓ, என்னே! நாம் ஆதியாகமம் 45-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம். அங்கே முன்னடையாளமான காரியத்தை நாம் காணலாம். நான் இங்கே சிலவற்றை எழுதி வைத்துள்ளேன்... அது ஆதியாகமம் 45-ம் அதிகாரம். குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறவர்களே, அதை குறித்துக் கொள்ளுங்கள். ஓ, எவ்வளவாய் நான் இந்தப் பழைய சுவிசேஷத்தை நேசிக்கிறேன்! இப்பொழுது நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். கட்டிடத்தின் பின்னால் உள்ளவர்களே, நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா? நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறது என்றால் உங்கள் கரங்களை உயர்த்திக் காண்பியுங்கள். இந்த அமைப்பை நான் சற்று நெருக்கமாகக் கொண்டிருக்கிறேன். (ஒலி பெருக்கி அமைப்பைப் பற்றிக் கூறுகிறார் தமிழாக்கியோன்). 36.வேத வாக்கியத்தின் இந்த ஒரு பாகத்தை நாம் வாசிக்கப் போகிறோம். வேதாகமம் இல்லாதவர்கள் இதற்கு செவி கொடுக்கும்படி கேட்கிறேன். வேதாகமத்தை வைத்திருக்கிறவர்கள் ஆதியாகமத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் நாம் 44-ம் அதிகாரத்திலிருந்து துவக்குவோம். 27-ம் வசனத்திலிருந்து துவக்குவோம். யோசேப்பு தான் கிறிஸ்துவுக்கு பரிபூரணமான முன்னடையாளமானவனாக இருக்கிறான். அதை நாம் அறிவோம். எத்தனை பேர்கள் அதை அறிவீர்கள்? அவன் எதனால் தன் சகோதர்களால் பகைப்பட்டான்? ஏனெனில் அவன் ஆவிக்குரியவனாயிருந்து, தரிசனங்களைக் கண்டு, சொப்பனங்களை வியாக்கியானம் செய்தான். அவன் தன் சகோதரர்களுக்குள்ளே ஒரு ஆவிக்குரிய மனிதனாயிருந்தான். அதனால் அவர்கள் அவனைப் பகைத்தார்கள். அவனது தகப்பன் அவனை நேசித்தார். அதைப் போலவே இயேசுவும் சடங்காச்சார மத ஸ்தாபனங்களால் பகைக்கப்பட்டார், ஆனால் பிதாவாகிய தேவனால் நேசிக்கப்பட்டார். அவர்கள் அவரை ஏன் பகைத்தார்கள்? ஏனெனில் அவர் ஆவிக்குரியவராயிருந்த படியினால்தான். 37.அவர்கள் அவனை குறி சொல்லுகிறவன், ஒரு பிசாசு என்று அழைத்தார்கள். யோசேப்பின் சகோதரனொருவன் என்ன சொன்னான் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “இதோ சொப்பனக்காரன் வருகிறான்” என்றான். பார்த்தீர்களா? அதே காரியம் தான். யூதாஸ் இயேசுவை என்ன கிரயத்திற்கு விற்றானோ, ஏறத்தாழ அதே கிரயத்திற்குத்தான் யோசேப்பும் அவர்களால் விற்கப்பட்டான். முப்பது வெள்ளிக் காசுகளுக்கு. அவனை ஒரு குழியில் தூக்கிப் போட்டுவிட்டு, தங்கள் தகப்பனிடம் சென்று, அவனை ஏதோ ஒன்று பட்சித்துப் போட்டுவிட்டது; அவன் மரித்துவிட்டான் என்று கூறினார்கள். ஆனால் அவனோ குழியிலிருந்து தூக்கியெடுக்கப்பட்டான். கிறிஸ்துவும் ஒரு குழியில் போடப்பட்டு, அங்கிருந்து தூக்கியெடுக்கப்பட்டார். அங்கிருந்து அவன் இப்பூமியிலேயே மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டான். ஆமென். யோசேப்பு பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்டான். இயேசுவும் தேவனுடைய வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்டார். அவர் உயர்த்தப்படுவதற்கு முன்பாக, இயேசு தாம் உயர்த்தப்படுவதற்கு முன்பாக, சோதனையின் வழியாகச் சென்றார். 38.மகத்தான சுவிசேஷகராகிய பில்லிசண்டே தான் இவ்வாறு கூறினார் என்று நம்புகிறேன். (வில்லியம் ஆஷ்லேய் சண்டே என்பவர்தான் இவ்வாறு பில்லி சண்டே என்று அழைக்கப்பட்டார். 1863 முதல் 1936 முடிய. இவர் ஒரு அமெரிக்கர், ஒரு சுவிசேஷகர் - தமிழாக்கியோன்) “இயேசு சிலுவையில்றையப்பட்டிருக்கிற அந்நாளிலே, ஒவ்வொரு மரத்திலும் இலட்சக்கணக்கான தூதர்கள் அமர்ந்திருந்தனராம். ”சற்றே உமது கரத்தை விடுவித்துக் கொண்டு, எங்களை நோக்கிக்சுட்டிக் காட்டும், நாங்கள் இங்குள்ள இக்காட்சியையே மாற்றியமைத்துவிடுகிறோம் என்றனராம்'' என்று அவர் கூறினார். ஆனால் அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. “மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக் கொள்ள திராணியில்லை'' என்று காய்பா கூறினான். தான் அவரை அவதூறு செய்வதாக அவனுக்குத் தெரியவில்லை. அவர் தன்னைத்தானே இரட்சித்துக் கொண்டிருப்பாரேயானால், மற்றவர்களை அவரால் இரட்சிக்க இயலாமல் போய்விட்டிருக்கும். எனவே மற்றவர்களை இரட்சிப்பதற்காக அவர் தன்னைத்தானே ஒப்புக் கொடுத்தார். அவர்கள் அதைப் பற்றி மிகவும் குருடாயிருந்தார்கள். இப்பொழுது அவர்கள்... 39.யோசேப்பு, தான் உயர்த்தப்படுவதற்கு முன்பாக, அவன் சோதனைக்குள்ளானான். அவன் நிரபராதியாயிருந்தும் சிறையில் அடைக்கப்பட்டான் என்பதை நினைவு கூருங்கள். எகிப்திய தேசத்தின் அதிபதியான போத்திபார் என்பவன் எங்கோ வெளியூருக்குப் போய்விட்டான். அவனுக்கு ஒரு அழகிய மனைவி இருந்தாள். அவனது மனைவி யோசேப்பை வீட்டுக்குள் வந்து பார்க்கத் தக்கதான ஒரு வேலையை அவனுக்குக் கொடுத்தாள். அந்த நேரத்தில் பார்த்து, யோசேப்பு தவறான காரியத்தை செய்யும்படி செய்ய முயற்சித்தாள். அவனோ தேவனுக்கு உண்மையாயிருந்தான். நான் உங்களுக்கு கூறுகிறேன், அவர்கள் எப்பொழுதும்... 40.ஸ்திரீகளே, நான் எப்பொழுதும் உங்களைக் குறித்து சப்தமிட்டுக் கடிந்து கொள்வதுண்டு. இப்பொழுது இன்னும் ஒரு நிமிட நேரத்தில் உங்கள் சார்பாகப் பேசப் போகிறேன். ஸ்திரீயானவள் எப்பொழுதும் ஒரு பெலவீன பாத்திரமாய் இருக்கிறாள். ஒரு கெட்ட ஸ்திரீ இருக்காமல் இருக்கும் போது, அப்போது ஒரு கெட்ட மனிதனும் இருக்கமாட்டான் என்பதை நான் அறிவேன். ஆனால் அதை அறிந்திருக்கிற மனிதனே, நீ ஒரு தேவனுடைய குமாரன் என்பதை அறிந்திருக்கிறாய், அப்படியிருந்தும், ஸ்திரீயின் பெலவீனத்தை சாதகமாக எடுத்துக் கொண்டால், அதற்காக நீ தலைகுனிய வேண்டும். அவள் என்ன செய்கிறாள் என்பது காரியமல்ல, அவள் ஒரு பெலவீன பாண்டம். நீ அதை அறிவாய். ஸ்திரீக்குரிய இலட்சணத்தோடு அவள் நடந்து கொள்ளாவிடில், அவள் கையைப் பிடித்து அவளை சகோதரியாகப் பாவித்து, அவளோடு பேசு. நீ ஒரு தேவகுமாரனாயிருக்கிறாய். அவர்களுக்கு நீ பொல்லாங்கான காரியங்களைச் செய்ய வேண்டாம். யோசேப்பைப் பாருங்கள்; அவன் உனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறான். 41.அத்தேசத்திலேயே மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த அந்த கனம் பொருந்திய ஸ்திரீயாகிய போத்திபாரின் அவ்வழகிய மனைவியானவள், அவனை கெஞ்சினாள், அவனைத் தூண்டினாள், அவனோ விலகிபோனான். அவன் அவனைப் பிடித்திழுத்து, தன்னோடு தழுவிக் கொள்ளும்படி செய்ய முயற்சித்தாள்; அவனோ அவளிடத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவள் பிடியிலிருந்து வலுவாக அவன் தன்னை இழுத்துக் கொண்ட போது, அவனது மேலாடை கூட அவனை நழுவிவிடும் அளவுக்கு ஆகிவிட்டது; இப்படியாக அவன் அவளை விட்டு விலகி ஓடிப்போனான். ஆம் ஐயா அவள் கணவன் வந்தபோது, அவனிடம், அவன் அவளை கெடுக்க வந்ததாகவும், தன்னுடைய மேலாடையைக் கூட தன்னிடத்தில் விட்டுவிட்டு ஓடிப் போனான் என்றும் அவர்கள் பொய் கூறினார்கள். அதனால் அவன் சிறைசாலைக்கு போகும்படி நேர்ந்தது. ஆனால் அவர்கள் அவனை எங்கு போட்டிருந்த போதிலும் தேவன் அவனோடு அச்சிறைச்சாலையில் இருந்தார். அவன் அந்த செழிப்பின் குமாரனுக்கு முன்னடையாளமாயிருந்தான். யோசேப்பு செய்த யாவும் விருத்தியடைந்தது. அதனால் தான் ஆயிர வருட அரசாட்சிக்கு இயேசு திரும்ப வரும்பொழுது, ரோஜாவைப் போல் பாலைவனங்கள் சோலைவனமாகும். அவர் செய்யும் யாவும் விருத்தியடைந்து செழிப்படையும். அவர் தான் செழிப்பின் குமாரனாவார். யோசப்பை நீங்கள் எங்கு போட்டாலும், அது ஆசீர்வதிக்கப்பட்டதாயிருந்தது. இயேசு எங்கெல்லாம் இருக்கிறாரோ, அதெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். ஆகவே நீங்கள் அவரை உங்கள் இருதயத்தில் பெற்றுக்கொண்டு, ஆசீர்வதிக்கப்படுங்கள். 42.ஆகவே, யோசேப்பு ஒரு சிறைச்சாலையில் போடப்பட்டான் என்பதை நாம் கண்டோம். அச்சிறைசாலையில் இரு நபர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் கெட்டுப்போனான். மற்றொருவனோ இரட்சிக்கப்பட்டான். சிலுவையில் இயேசு பாடுபட்டபொழுது, ஒரு கள்ளன் கெட்டுப்போனான். மற்றவனோ இரட்சிக்கப்பட்டான். அவர் உயர்த்தப்பட்டபொழுது, தேவனுடைய வலது பாரிசத்திற்கு போனார். யோசேப்பு உயர்த்தப்பட்ட பொழுது, பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்டான். யோசேப்பினிடம் பேசி அனுமதி பெறாமல் ஒருவனும் இனி பார்வோனிடம் பேச முடியாது என்ற நிலைமை இருந்தது. யோசேப்பு அரன்மனையைவிட்டு புறப்பட்டு பவனி வந்தபொழுது, (ஓ, என்னே) எக்காளங்கள் முழங்கின; அவனுக்கு முன்னால் மனிதர்கள் முன்னோடிச் சென்று, ''யோசேப்பு வருகிறார். உங்கள் முழங்கால்களை முடக்குங்கள்'' என்று கூறினர். ஆமென்! அவ்வாறே இயேசு உன்னதமானவருடைய வலது பாரிசத்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, எக்காளங்கள் முழங்கிடும் எல்லா முழங்கால்களும் அவருக்கு முன்பாக முடங்கும். ''இயேசு வருகிறார்“ என்று எல்லா நாவுகளும் அறிக்கையிடும். நிச்சயமாக நடக்கும்! அவன் தன்னுடைய சகோதரரால் புறக்கணிக்கப்பட்ட போது, அவன் என்ன செய்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் ஒரு புறஜாதி மனைவியை பெற்றுக் கொண்டான். அவன் ஒரு எகிப்திய மனைவியை உடையவனாயிருந்தான். அதே போல் இயேசுவும் யூதராகிய தமது சகோதரரிடத்திலிருந்து புறம்பாக்கப்பட்டபோது, அவர் ஒரு புறஜாதி மணவாட்டியை மணந்து கொண்டார். ஆனால் இப்பொழுதோ, அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, பிள்ளைகள் பிறந்த பிறகு - எப்பிராயீம், மனாசே - அவனுக்கு இப்பொழுது ஒரு குடும்பம் உண்டாயிருந்தது. 43.பிறகு, ஒரு நாளிலே அவனது சகோதரர்கள் அவனைப் பார்க்க வருகிறார்கள். கவனியுங்கள்! நடந்த அந்த வரலாற்றை நாம் அறிவோம். எவ்வாறு அந்தச் சிறிய பொருளை அவர்கள் உடைமைகளோடு போட்டுவிட்டு, அவர்களுடைய பாஷையில் பேசத் தெரியாதவனைப்போல் அவன் நடித்தான் என்பதை நாம் அறிவோம். அவன் தானே ஒரு எபிரெயனாக இருந்த போதிலும், அவர்களோடு பேசுவதற்காக எபிரெய மொழி தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளனை வைத்துக் கொண்டுதான் பேசினான். அவர்களுடைய சகோதரன் அவர்களிடம் வந்தான். அவன் இன்னான் என்று அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அவன் ஒரு வல்லமையுள்ள அதிபதியாயிருந்தான். இப்பொழுதும் கூட கிறிஸ்துவானவர் யூதர்களைச் சந்திக்கிறார். அவர்களுடைய பிணியாளிகளைச் சொஸ்தமாக்குகிறார்; இருந்த போதிலும் இன்னமும் அவர்கள் அந்த மேசியா யார் என்பதை அறியவில்லை. 44-ம் அதிகாரம் 27-ம் வசனத்தில் துவக்குவோம் (ஆதியாகமம்). ''அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார். என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்; அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான். (அவன் தான் யோசேப்பு, அவனிடத்தில் தான் அவர்கள் பேசிக் கொண்டு இருக்கின்றனர்)... அவன் பீறுண்டு போயிருப்பான் என்றிருந்தேன்; இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் இவனையும் என்னை விட்டுப் பிரிந்து அழைத்து போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள் என்றார். ஆதி. 44: 27-29. 44.அவனுடைய இளைய சகோதரனாகிய சின்ன பென்யமீனை அவர்கள் விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். பென்மீன்யாருக்கு முன்னடையாளமாயிருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது கூடி வந்து கொண்டிருக்கிற இந்த புதிய கூட்டமான உண்மையான அசல் யூதர்கள் தான் அந்த 1,44,000 பேர்களை உருவாக்கப் போகிறார்கள். எழும்பி வந்து கொண்டிருக்கிற அந்த ஜாதியார்தான் அவர்கள். இந்த வால் ஸ்ட்ரீட்டில் உள்ள கோணலும் மாறுபாடுமான இந்த மக்கள் அல்ல அவர்கள், இல்லை, இல்லை. அவர்கள் அதிக அளவுக்கு அழிவுக்கு என்று உள்ளவர்கள். (அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு தெரு தான் இந்த வால் ஸ்ட்ரீட் ஆகும். அமெரிக்கா பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் விளங்கும் நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தை இங்கே தான் உள்ளது. இதில் தந்திரமிக்க யூதர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் - தமிழாக்கியோன்) அவர்கள் யூதர்கள் அல்ல, அவர்கள் யூதர்களே அல்ல. உண்மையான யூதர்கள் தான் அந்த சின்ன பென்யமீனாக இருந்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்பட்டிராதவர்களாய் இருந்து இப்பொழுது எழும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். 45.''ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்'' ஆதி. 44:30. தேவனுடைய சொந்த ஜீவன் இஸ்ரவேலோடு இணைக்கப்பட்டு உள்ளது. அவர் அந்த ஜனத்தை விவாகம் செய்து கொண்டுள்ளார். கர்த்தருக்குச் சித்தமானால், இன்னும் சில நிமிடங்களுக்குள், நாம் அதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். அவர் இஸ்ரவேலரை மணந்து கொண்டிருக்கிறார். எவ்வாறு நான் திருமதி பிரான்ஹாமாகிய என் மனைவியோடு இணைக்கப்பட்டிருக்கிறேனோ, நீங்கள் உங்கள் மனைவியோடு இணைக்கப்பட்டிருக்கிறீர்களோ, அவ்வண்ணமாகவே, அந்த ஜனத்தோடு தேவனுடைய ஜீவனும் பிணைக்கப்பட்டு உள்ளது. அதனோடு உங்கள் ஜீவன் பிணைக்கப்பட்டுள்ளது. தேவன் இஸ்ரவேலரோடு விவாகம் செய்து கொண்டுள்ளார். அது எவ்வாறிருந்தது? “என் ஜீவனானது அந்தப் பிள்ளையின் ஜீவனோடே ஒன்றாய் இணைந்திருக்கிறது'' என்று யாக்கோபு கூறினானே, அதைப்போல. ''அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்த மாத்திரத்தில் இறந்துபோவார். (யோசேப்பு இந்த இளைஞனை தன் வசம் வைத்துக் கொள்ளப்போகிறான், அந்த வரலாற்றை நாம் அறிவோம்)... இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவோம். (ரூபன் இப்போது ஏறெடுக்கும் வேண்டுகோளை கேளுங்கள்) இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டு வராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன். இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடே கூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்... (ஓ என்னே! தன் சகோதரனாகிய யோசேப்புக்கு முன்பாகத் தான் அவன் நின்று கொண்டிருக்கிறான். இவன் தான் யோசேப்பு, ஆயினும் அவனோ அவனை அறிந்து கொள்ளவில்லை. ஓ, ஆயிர வருட அரசாட்சி ஆரம்பிக்கிற வரையிலும் காத்திருங்கள், சகோதரனே)... உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு... (அவன் கூறுவதைக் கேளுங்கள், அவனை ''ஆண்ட வனே“ என்று அறிக்கையிடுகிறான்)... அடிமையாயிருக்கிறேன். இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான். ஆதி. 44:31-34 46.அவன் அங்கே தன் ஜீவனையே ஒப்புக்கொடுத்து மன்றாடுகிறான். எப்படியாய் அந்த யூதர்கள் தங்கள் கைகளை விரித்த வண்ணமாய் அங்கே நிற்கப் போகிறார்கள் கவனியுங்கள். இப்பொழுது 45-ம் வசனத்தை கவனியுங்கள். (45-ம் அதிகாரம் என்று இருக்க வேண்டும் - தமிழாக்கியோன்) கவனமாக செவி கொடுங்கள், இதைக் காணத் தவறவேண்டாம். அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக் கொண்டிருக்கக்கூடாமல்.... (சகோதரனே, அந்த வேளையில் தான் பாவமானது தீர்க்கப்படப் போகிறது. அவிசுவாசமானது சிதறிப் போகப் போகிறது)... யாவரையும் என்னை விட்டு வெளியே போகப் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்து கையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. ஆதி. 45:1 அது என்னவாயிருக்கிறது? அவனுடைய சொந்த மனைவி கூட அரண்மனைக்குத் திரும்பிப் போய்விட்டடாள். ஓ, இயேசு தம்மை தெரியப்படுத்தப் பண்ண திரும்பி வரும் போது, அவ்வேளையில் மணவாட்டியானவள் மகிமையில் இருப்பாள். அதைப் பற்றி இங்கே நாம் பார்க்கப் போகிறோம். 47.அவன் சத்தமிட்டு அழுதான்...(யோசேப்பினால் அடக்கிக் கொள்ள அதற்கு மேலும் முடியவில்லை; அவன் கதறி அழுதான்)... அதை எகிப்தியர் கேட்டார்கள். பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். (அரண்மனையின் உள்ளே இருந்த யாவரும் யோசேப்பு அழுததைக் கேட்டார்கள்). ஆதி. 45:2 அந்த சம்பவம்தானே, கிறிஸ்துவானவர் யூதர்களைச் சந்திக்கப் போகிற விஷயத்திற்கு எடுத்துகாட்டாய் இருக்கிறது. நமக்கு ஒரு தருணம் கிடைக்கத் தக்கதாகத் தான் அவர்கள் குருடாக்கப்பட்டார்கள் என்பதை அவர் அறிவார். ஆனால் அவர்களிடத்துக்கு அவர் மீண்டும் வரும் போது, இஸ்ரவேலின் பாவம் தீர்ந்து போகும். ''யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து: நானே யோசேப்பு... (இயேசு என்ன கூறுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ''நீங்கள் சிலுவையில் அறைந்த மேசியா நான் தான்“ என்று கூறுவார்) என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாக கலக்கமுற்றிருந்ததினாலே அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள்''. ஆதி. 45:3 48.ஓ, ஒரு நிமிட நேரம் நாம் சற்று இங்கே நிறுத்தியாக வேண்டும். சகரியா 12-ம் அதிகாரத்திற்கு நாம் திருப்புவோமாக. என்னோடு கூட சகரியா 12-ம் அதிகாரத்திற்கு திருப்புங்கள். ஒரு வேளை நான் சற்றுக் கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டு பிரசங்கத்தில் துவங்கிவிடுகிறேன் போல் இருக்கிறது. அவ்வாறு செய்யமாட்டேன் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இதை மிகவும் நன்றாக அறிந்துகொள்ள வேண்டுமே என்று நான் விரும்புகிறேன். சகரியா: 12-ம் அதிகாரம் எடுத்துக் கொள்வோமாக. அவர் தன் சகோதரருக்கு முன்பாக நிற்கும் போது, என்ன கூறப் போகிறார் என்பதை நாம் காண்போமாக. சகரியா 12-ம் அதிகாரம் 10-ம் வசனம் (இப்போது பாவத்தை தொலைக்கப் போகுதல் நடக்கிறது) 49.அவர் இங்கே மீதியாயுள்ளவர்களைப் பற்றியே பேசுகிறதைக் கவனியுங்கள். எருசலேம் முற்றுகையிடப்படுதல், மிருகம், சேனைகள், அதைக் கைப்பற்றுதல் ஆகியவைகள் அங்கே விவரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் முடிவு காலத்துக்கு அடுத்ததாக இருக்கிறது. இது ஏறத்தாழ ஆயிர வருட அரசாட்சிக்கு சமீபமான வேளையாயிருக்கிறது. இவை நடக்கும் போது ஆயிர வருட அரசாட்சியானது துவங்க ஆயத்தமாயிருக்கும். ''நான் தாவீது குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின் மேலும்... (என்ன?)... கிருபையின் ஆவியையும் (ஆமென் ஆச்சரியமான கிருபை!). எருசலேமின் குடிகளின் மேலும்... (அது தானியேலின் பரிசுத்த நகரமாகும்)... கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஓரே பேறானவனுக்காகப் புலம்புகிறது போல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறது போல எனக்காக மனங்கசந்து தூக்கிப்பார்கள். சக. 12:10 50.செவிகொடுங்கள்! யோசேப்பு செய்தது போல அவரும் அவர்களுக்கு தன்னைத் தெரியப்படுத்திக் கொண்டு நிற்கையில் என்னே ஒரு புலம்பலாக அவ்வேளை இருக்கப் போகிறது! அந்நாளிலே மெசிதோன் பட்டணத்துக்குப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் (என்னால் அப்பெயரை உச்சரிக்க இயலவில்லை)... புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். தேசம் புலம்பிக் கொண்டிருக்கும்: ஒவ்வொரு வம்சமும் தனித் தனியாக புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும். லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும். மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும், அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள். சக. 12:11-14 அவர்கள் அந்த இராத்திரியிலே சிலுவையிலறைந்த தங்களுடைய அதே விலையேறப்பேற்ற யோசேப்பின் முன்னால் நின்று அவரைக் கண்டு கொள்ளும்போது அவர்கள் மிகவும் வெட்கமடைந்து தலைகுனிவார்கள்.(இயேசுவைத்தான் யோசேப்பு என்று குறிப்பிட்டுள்ளார் - தமிழாக்கியோன்) ''இந்த வடுக்கள் உமக்கு எங்கே ஏற்பட்டது?'' (சகரியா 13:6) என்று அவர்கள் அவரிடம் கேட்டு பெரிதாகப் புலம்புவார்கள். அவர்கள், “அவரிடம் எங்கே இக்காயங்கள் உமக்கு ஏற்பட்டன?'' என்று கேட்பார்கள். ''என் சிநேகிதரின் வீட்டிலே'' என்பார் அவர். நான் கூறியதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அவிசுவாசமாகிய பாவத்திற்கு முடிவு கட்டுதல், அதற்காகத்தான் அவர் வருகிறார். 51.இந்த எழுபதாவது வாரத்தில் தான் பாவத்தை தொலைக்கிறதற்கு அவர் வருகிறார். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? முதலாவதாக என்ன? மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவத்தைத் தொலைக்கிறதற்கும். மூன்றாவதாக அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும். குறிப்பெடுத்துக் கொள்ளுகிறவர்கள் அதை குறித்துக் கொள்ளுங்கள். என்னிடத்தில் இங்கே இன்னும் வேறு ஆறு வேத வாக்கியங்கள் உள்ளன. ஆனால் நான் அவைகளை விட்டு விடுகிறேன். ஏனெனில் உஷ்ணமாயிருக்கிறது. அதிகமான நேரத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எவ்வளவு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ அவ்வளவையும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் மிக அதிகமான நேரத்திற்கு உங்களை இங்கே தங்க வைக்க நான் விரும்பவில்லை. 52.அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கு. அக்கிரமம் என்பது குற்றம் புரிதல் ஆகும். அவர்கள் சிலுவையில் செய்தது போல. அவர் நிவிர்த்தி செய்தார், ஆனால் அது அவர்களுக்கு பொருந்தாது. ஏன்? ஏனெனில் அவர்கள் குருடாக்கப்பட்டவர்கள், அதினால் அவர்களால் காணமுடியாது. அவர்கள் ஏன் குருடாக்கப்பட்டார்கள்? “நல்லது, ஒரு வேளை இன்றைக்கு நான் குருடாயிருக்கிறபடியினால்..'' என்று நீங்கள் கூறலாம். நீங்கள் வேண்டுமென்றே குருடாயிருக்கிறீர்கள். ஆனால் அவர்களோ, தேவன் அவர்களை குருடாக்கினபடியால் குருடாயிருந்தனர். ஆனால் நீங்களோ குருடாயிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒப்புரவாகுதல், நிவிர்த்தியாக்கிக் கொள்ளுதல் கிடையாது. ''நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்” என்று இயேசு கூறினார். (யோவான் 8:24). அது சரிதான். 53.இப்பொழுது நாம் மீண்டும் சகரியாவுக்குப் போவோம். 13-ம் அதிகாரம். இங்கே செவி கொடுப்போமாக. நிவிர்த்தி செய்தல். இதற்குச் செவி கொடுப்பதற்காக சிலரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு வேளை... கர்த்தர் எப்படியாவது அதை நிறைவேற்றுவார். ''அந்நாளிலே...'' டாக்டர் ஸ்கோபீல்ட் தன்னுடைய அடிக்குறிப்பில் (Foot notes), இல்லை, பாராவின் தலைப்பில் “மீதியுள்ளவர்கள் - மனந்திரும்பிய மீதியாயிருப்பவர்கள் - சிலுவைக்கு நேராக சுட்டிக் காட்டப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கு... அக்கிரமம் என்பது ஒரு குற்றமாகும், அதை நீங்கள் செய்யக் கூடாது என்று நன்கு தெரிந்திருந்தும், அதை செய்வதாகும் ''என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவி கொடார்“ (சங். 66:18). 54.இப்பொழுது நாம் சகரியா 13-ம் அதிகாரம் 1-ம் வசனத்திலிருந்து துவக்குவோம். அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும். சக.13:1. அங்கே திறக்கப்பட்ட வீடொன்று உண்டாயிருக்கும். தொடர்ந்து படித்துக் கொண்டே செல்லுங்கள். நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே செல்லலாம். அதை நீங்கள் குறித்துக் கொள்ளும்படி நான் விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் அதை படிப்பீர்கள். ஆனால் இப்பொழுது, இங்கே நான் 6-ம் வசனத்திலிருந்து ஆரம்பித்து 10-ம் வசனம் முடிய வாசிக்கும்படியாக நான் குறித்து வைத்துள்ளேன். நல்லது, இப்பொழுது நாம் 9-ம் வசனம் முடிய வாசிப்போமாக. அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காணப்பட்டதினால் உண்டானவைகள் என்பான் பட்டயமே, என் மேய்ப்பன் மேலும் என் தோழனாகிய புருஷன் மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர் மேல் திரும்ப வைப்பேன். சக. 13:6-7. 55.அவ்வேத வாக்கியத்தை இயேசுவும் மேற்கோள்காட்டினார்: ''மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும்'' (மத் 26:31). ஆனால் கவனியுங்கள், அடுத்த பாராவை. அவர் அதுவரையிலும் மட்டும் மேற்கோள் காட்டினார். ஆனால் அவ்வசனத்தின் அடுத்த வாக்கியம் என்ன கூறுகிறது என்பதைக் கவனியுங்கள். ஆனாலும் என் கரத்தைச் சிறுவர் மேல் திரும்ப வைப்பேன்'' (சக.13:7). அது என்ன? அதுதான் அந்த பென்யமீனாகிய அக்கூட்டம் இப்பொழுது எழும்பி வருதலாகும். “என் கரத்தைச் சிறுவர் மேல் திரும்ப வைப்பேன். மேய்ப்பனை வெட்டுவேன்... இஸ்ரவேல், முந்தைய இஸ்ரவேல் மேய்ப்பனை வெட்டியது, அதனால் ஆடுகள் உலகம் பூராவிலும் சிதறடிக்கப்பட்டனர். ஆனால் தேவனோ “நான் கடைசி நாட்களிலே என்னுடைய கரத்தை சிறுவர் மேல் வைத்து அவர்களை திரும்பக் கொண்டு வருவேன்'' என்கிறார். எப்பொழுது? அக்கிரமம் நிவிர்த்தி செய்யப்படும் போது அது நடக்கும். இஸ்ரவேலர் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள். 56.ஏசாயா 66-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். ஏசாயா 66-ம் அதிகாரம். அங்கே சற்று நேரம் வாசித்து இஸ்ரவேலர் இரட்சிக்கப்படுதலைக் குறித்து தேவன் என்ன கூறுகிறார் என்பதைக் காண்போமாக. இஸ்ரவேலை இரட்சிப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் குறித்து தேவன் என்ன சொல்லுகிறார் என்பதைக் காண்போமாக. ஏசாயா 66-ம் அதிகாரம் 8-ம் வசனத்தில் அது எவ்வளவு சீக்கிரமாக வருகிறது என்பதைக் கவனியுங்கள். முழுவதையும் வாசிக்க நீங்கள் விரும்பினால், அப்படியே செய்து கொள்ளுங்கள். இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ?... சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது. ஏசா. 66:8 சீயோனானவள், அது அவர்களுடைய மேசியாதான் என்பதைக் கண்டு கொண்ட உடனேயே, ஒரே நாளில் அவள் மறுபடியும் பிறந்து விடுவாள். பாவங்களுக்காகவும், அக்கிரமத்திற்காகவும், அசுத்தத்திற்காகவும் பிராயச்சித்தம் செய்து நிவிர்த்தி செய்யப்படும். ஓ, என்னே! பொல்லாங்கானதை குற்றமானதை அவர்கள் செய்தார்கள். அவர்களுடைய அக்கிரமம் நிவிர்த்தி செய்யப்படுதல் அவர்களுக்குக் கிடைக்கும். 57.நான்காவது: ''நித்திய நீதியை வருவிக்கிறதற்கும் அது தான் நான்காவதான நோக்கமாகும். அதற்காகத்தான் அவர் வந்தார். அவர் எதற்காக வருகிறார்? நித்திய நீதியை வருவிக்கிறதற்காக; பாவத்தைத் தொலைக்கிறதற்காக; நிவிர்த்தி செய்ய. நித்திய நீதியை வருவிக்கிறதற்கு. இஸ்ரவேலரின் மீறுதலானது ஒரு முடிவுக்கு வருகையில், இஸ்ரவேலரின் மீறுதல். இதை நீங்கள் பிடித்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனெனில், நாம் அந்த ஸ்திரீயையும், கீழே தள்ளப்பட்ட வலு சர்ப்பத்தையும் குறித்து பார்க்கப் போகும்போது, இதே வேத வாக்கியத்தை நாம் திரும்பவும் பார்க்க வேண்டியதாயிருக்கும். இதை உறுதியாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இஸ்ரவேலரின் மீறுதலானது ஒரு முடிவுக்கு வரும் போது, அவர்கள் மேலும், நம் மேலும் குற்றஞ்சாட்டுகிறவனாகிய சாத்தானாவன், பாதாளத்தில் தள்ளியடைக்கப்பட்டு, அதின் மேல் முத்திரை போடப்பட்டது. (வெளி. 20:2). அப்பொழுது என்ன. நித்திய நீதியை வருவிக்கிறது என்று சொன்னால், முடிவில்லாத ஒன்றாக அது இருக்கிறது. அநீதி தொலைக்கப்படுவதினால் தான் இதெல்லாம் நடக்கிறது. 58.வெளிப்படுத்தின விசேஷம் 20-ம் அதிகாரம் 13-ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு நிமிட நேரம் சற்று இதை வாசிப்போமாக. வெளிப்படுத்தின விசேஷம் 20 அதிகாரம் 13-ம் வசனம். மன்னிக்கவும், அது வெளிப்படுத்தின விசேஷம் 20-ம் அதிகாரம் 1 முதல் 3-ம் வசனம் முடிய . இரண்டுக்கும் நடுவில் போடப்பட்டிருந்த அக்கோட்டை நான் கவனிக்கவில்லை. வியர்வை என் கண்களில் வந்து மறைத்துவிட்டபடியினால் அப்படி ஆகியது. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவும் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும் அது ஜனங்களையே மோசம் போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின் மேல் முத்திரை போட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாக வேண்டும். வெளி. 20:1-3 நித்திய நீதியை வருவித்தல். சாத்தான் அப்பொழுது பாதாளக் குழியில் தள்ளப்படுகிறான். அவர் அதைச் செய்யும் போது, மக்களை வஞ்சித்த பிசாசானவனை முத்திரையிட்டுவிடுகிறார். 59.இப்பொழுது நாம் ஆபகூக் இரண்டாம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். இப்பொழுது நாம், அந்த பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் ஏன் முத்திரையிடப்பட்டான் என்றும், அது ஏன் அவ்வாறு செய்யப்பட்டது என்றும், அவன் முத்திரையிடப்பட்ட உடனேயே என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். நான் இதை விரும்புகிறேன். நீங்கள் விரும்புகிறீர்களா? அது நம்மை ஒரு விஷயத்தைப் பற்றி அறிவுக்குள் கொண்டு வருகிறது. ஆபகூக் 2-ம் அதிகாரம் 14-ம் வசனம் என்று நான் நினைக்கிறேன். அதை நான் வாசிக்க விரும்புகிறேன். இது நடக்கும் பொழுது, கவனியுங்கள்! ''சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.'' ஆப. 2:14 அதனுடைய அர்த்தம் என்னவெனில், சத்துருவானவன் அடைக்கப்பட்டபொழுது, பாவமானது முடிவுக்குக் கொண்டு வரப்படும் போது நித்திய நீதியானது வருவிக்கப்படும் பொழுது சாத்தானானவன் பாதாளக் குழியில் தள்ளியடைக்கப்பட்டு, முத்திரையிடப்பட்டு இருக்கும் போது, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல் பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் ஆமென்! தேவனுக்கு மகிமையுண்டாவதாக! சகோதரனே, அது வரப்போகிறது. அது வரப் போகிறது. அப்பொழுது ஸ்திரீகள் யாவரும் எல்லா நற்குணமும் பொருந்திய மாது சிரோன்மணிகளாய் இருப்பார்கள். மனிதனானவன் எல்லாப் பண்பும் நிறைந்த ஒழுக்க சீலராக இருப்பான் ஆமென். கர்த்தரை அறியும் அறிவினால் பூமியும், சமுத்திரமும், வானமும் நிறையப்போகிறது அவ்விடுதலையின் நன்நாளுக்காக என் உள்ளம் ஏங்கித் தவிர்க்கிறது. அப்போது நமது இயேசு பூமிக்குத் திருப்பி வந்திடுவாரே, (ஆமென்!) அது சரி, அப்பொழுது, ஆயிரவருஷ அரசாட்சி துவங்கிடும். ஆயிர வருஷ அரசாட்சியின்போது அந்நகரம் கட்டப்படும். நான்காவது. இங்கே நான் இன்னும் ஆறு வேத வசனங்களை குறித்து வைத்திருக்கிறேன். ஆனால் நாம் விரைவாக செல்லுவோம். நாம் திரும்ப இவைகளைப் பார்க்கப்போகும் போது, இந்த ஏனைய வேதவாக்கியங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்குப் பொதுவான ஒரு கருத்து ஏற்படுவதற்காககத்தான் நான் இப்பொழுது இவைகளை உங்களுக்கு கூறகிறேன். 60.ஐந்தாவது தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்தரிக்கிறதற்கும் தூதன் தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்தரிக்கிறதற்கும் வருகிறான். (இவ்வொலி நாடாவின் ஒரு பாகம் காணவில்லை - ஆசி). ஓ , மன்னித்துக் கொள்ளுங்கள். நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. என்னை மன்னியுங்கள். நான் அவ்விதமான கருத்தில் கூறவில்லை. நிச்சயமாக இல்லை. அபிஷேகத்தின் கீழாக இல்லாத ஒரு மனிதன் இவ்வாறு கூறினான். ''யூத சபைக்கென்று மாத்திரமே தரிசனங்களும் தீர்க்கதரிசனங்களும் எப்பொழுதும் அனுமதிக்கப்பட்டன. தானியேலின் காலத்திலிருந்து தானியேல் வந்தபொழுது அவனுக்குப் பிறகு இனிமேல் தரிசனங்களோ, அல்லது இனிமேல் தீர்க்கதரிசனங்களோ அவர்களுக்கு இருக்காது என்பதுதான் அதன் அர்த்தம். இன்றைக்கு தரிசனங்கள், தீர்க்கதரிசனங்கள் கிடைத்தன என்று மக்கள் சொல்லுவதெல்லாம், யாவும் பிசாசினுடையதாகும். தரிசனங்கள், தீர்க்கதரிசனங்கள் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது“ இவ்வாறு அந்த மனிதன் கூறினான். சகோதரனே, தானியேலுக்குப் பிறகு டஜன் கணக்கில் தீர்க்கதரிசிகள் வந்தனர். யோவான் ஸ்நானன் வந்தான்; இயேசு கிறிஸ்து வந்தார்; புதிய ஏற்பாட்டுக்கென்று தீர்க்கதரிசிகள் உண்டாயிருந்தனர். தரிசனங்கள் உண்டாயிருந்தன; தூதர்கள் உண்டாயிருந்தனர். உலகில் ஒரு மனிதன் எங்ஙனம் அவ்வாறு கூறமுடியும்! ஆனால் பாருங்கள், இவைகளெல்லாம் ஜனங்கள் மேல் எதையோ திணிக்கத் தக்கதாக சுயநல நோக்கங்கொண்ட செயலாகும். அந்த விதமான ஒரு சபைப் போதகத்தை உண்டாக்குவதற்கென்று உள்ள நோக்கமாகும்; மக்களுக்கு நிஜம் போன்று தோன்றத் தக்கதாகச் செய்யப்படும் ஒரு அற்பமான காரியமாகும். மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்காவிடில் அவர்கள் அதினால் வஞ்சிக்கப்பட்டவிடுவார்கள். 61.எனவே, ஏதாவது ஒரு மனிதன் கூறிய கூற்றுக்களை நாம் ஏற்றுக் கொள்ளாமலிருப்போமாக. அதை நிரூபிக்க வேத வாக்கியம் ஒன்றும் இல்லை. அதை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்வேன்? நல்லது, முத்திரையிடுதல் என்றால் உண்மையிலயே அதன் அர்த்தம் என்னவென்று பார்ப்போம். கவனியுங்கள்! அவர் தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரையிடவே வருகிறார். நாம் ஏற்கெனவே பார்த்த தானியேலின் புஸ்தகத்திற்கு மறுபடியும் போவோம். தானியேலின் புஸ்தகத்தில் அதைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நாம் காண்போம். தானியேலின் புஸ்தகம் 12-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவோம். நாம் இப்பொழுது முதலாம் வசனத்திலிருந்து நான்காம் வசனம் முடிய வாசிப்போம். நீங்கள் வீடுகளுக்குச் செல்லும்போது 1-ம் வசனத்திலிருந்து முழுவதையும் வாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். (இப்பொழுது இது கடைசி காலத்தில் நடக்கப்போகிற காரியமாகும்)... யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்துக் காலம் வரும்... இது முதல் குதிரையின் மேல் ஏறிப்போகிற அந்திக் கிறிஸ்து முதலாம் முத்திரையின் கீழாகப்போகும் போது உள்ளதாகும். தீத்து தளபதி எருசலேமின் மதில்களை இடித்து அழித்துப் போட்டபோது உள்ளதல்ல அது. அது ஒரேயொரு இடத்தில்தான். வரப் போகிற அதிபதியாக அந்திக் கிறிஸ்துவை , அவன் வரும்போது கவனியுங்கள் அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். அல்லேலூயா! உன் ஜனங்களாகிய இஸ்ரவேலர் ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டிருப்பார்கள். பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். தானி 12:1-2 62.எருசலேமின் மதில்களை தீத்து (ரோமத் தளபதியாகிய தீத்து - தமிழாக்கியோன்) தரைமட்டமாக்கினபோது இது எப்படி நடக்க முடியும்? அது எவ்வாறு இருக்க முடியும்? அவ்வாறு இருக்க முடியாது. கடைசி காலத்தில் உள்ள உயிர்தெழுதலின் சமயத்தில் நடக்கப் போகிற காரியத்தைத் தான் அவன் இங்கே கூறுகிறான். அது சரிதானே? ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போலவும் அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானி. 12:3. இங்கே கவனமாய் செவிகொடுங்கள்!இங்கே தான் உண்மையான முத்திரையிடப்படுதல் இருக்கிறது. தானியேலாகிய நீயோவென்றால்,முடிவு காலம் மட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு... தானி.12:4 63.அது என்ன? ஓ, அல்லேலூயா! இங்கு கூடி வந்திருக்கிறவர்களே, நீங்கள் அதை பார்க்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு, அவரது வல்லமை, அவரது வருகை, கடைசி காலம் ஆகியவைகளைப் பற்றிய விஷயங்களெல்லாம் இக்காலம் வரையிலும் முத்திரையிடப்பட்டுள்ளது. அதற்காகத் தான் அவர் வருகிறார். அது மேதாவிகளின் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவர்கள் இந்த “முத்திரையிடப் படுதல்” என்கிற இவ்விஷயத்தை அக்காலத்தில் உள்ள அத்தீர்க்கதரிசிகளுக்கு சம்மந்தப்படுத்திப் பேசுகிறார்கள். இப்படி அவர்கள் செய்வது ஆச்சரியமல்லவே. அவ்வுபதேசம் வலுவில்லாதது, நிலைநிற்க முடியாதது (தரிசனங்களையும், தீர்க்கதரிசனத்தை முத்திரிக்கிறதற்கும் என்று சொல்லப்பட்ட வசனத்தை, சிலர் உபதேசிக்கையில், தானியேலோடு எல்லாத் தீர்க்கதரிசனமும், தரிசனமும் முத்தரிக்கப்பட்டுவிட்டதால், இனிமேல் தீர்க்கதரிசனமோ, தரிசனமோ தானியேலுக்குப் பிறகு இருக்காது என்று போதிக்கின்றனர் அது தவறு என்பதை மேலே சகோ. பிரான்ஹாம் நிருபிக்கிறார் - தமிழாக்கியோன்). ஆனால் இந்தத் தரிசனமோ இதுவரைக்கிலும் மறைவாக இருக்கும்படியாக முத்திரையிடப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது; அங்கே தான் என்னுடைய விசுவாசத்தை வைத்து தேவன் அந்த எழுபது வாரங்களைக் குறித்து வெளிப்படுத்துவார் என்று இருக்கிறேன். ஆமென் “முடிவு காலம் மட்டும் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு'' என்று அவர் கூறினார். ”இவ்வார்த்தைகளை புதைபொருளாக வைத்து வைத்து, முடிவு காலம் மட்டும் இருக்கும்படி முத்திரைபோடு'' என்று கூறப்பட்டது. 64.அவன் என்ன செய்தான்? தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்தரிப்பதற்காக! இவைகளைப் பற்றியெல்லாம் தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்தான். அவன் அதை ஒரு தரிசனத்திலே கண்டான்; தூதன் தரிசனத்தை முத்திரையிடுவதற்காகாவும், தீர்க்கதரிசனத்தை முத்திரையிடுவதற்காகவும் இறங்கி வந்தான். அவர்களால் அதை படிக்க முடியும். ஆனால் புரிந்து கொள்ள முடியாது - முடிவு காலம் மட்டும் அப்படியிருக்கும். முடிவு காலம் - முடிவு காலம் என்பது என்ன? எழுபதாவது வாரத்தின் முடிவு வேளை; அப்போது அதிபதியாக அந்திகிறிஸ்து வெளிப்படுவான்; இவ்வேளையில் அவன் தன்னை தேவனாக ஆக்கிக்கொள்ளுவான். இக்காலம்மட்டும் இது முத்திரையிடப்பட்டுளது என்பதை நாம் எவ்வாறு அறிவோம்? தானியேலின் புஸ்தகம் கடைசி அதிகாரத்தில், தானியேல் இதைச் செய்தான். 65.சகோதரி சிம்ப்சன் இன்று மதியம் என்னிடம், ''சகோதரன் பிரான்ஹாம், நான் தானியேலின் புஸ்தகம் முழுவதையும் வாசித்தேன். நான் வாசிக்க ஆரம்பிக்கையில் எனக்கு எப்படி ஒன்றுமே தெரியாததாக இருந்ததோ, அதேவிதமாகத்தான் அப்புஸ்தகம் முழுவதும் நான் வாசித்து தீர்ந்தபோதும், எனக்கு ஒன்றுமே புரியாததாக அதில் இருந்தது“ என்று கூறினார்கள். இதோ இங்கே அது இருக்கிறது. சகோதரி சிம்ப்சன் அவர்களே, இன்றிரவில் நீங்கள் இங்கே இருப்பீர்களானால், அதோ அங்கே அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று நான் காண்கிறேன். நான் வாகனத்தில் உட்கார்ந்திருக்கையில் அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் பேசாமலிருந்தேன். ஏனெனில் நான் அதைப் பற்றி பேசப் போகிறோமோ என்று எண்ணினேன். ஆனால் அந்நதியண்டையிலே தானியேல் கண்ட தரிசனமானது முடிவு காலம் மட்டும் புதைபொருளாக இருக்கும்படி முத்திரையிடப்பட்டது. இன்னும் மேலே தொடர்ந்து போய் அதை நான் வாசிப்பேனாக. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரை போடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான். அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும், ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டு பேர் நிற்கக் கண்டேன். சணல் வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின் மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவு வர எவ்வளவு காலம் செல்லும் என்று கேட்டான் (இப்பொழுது கேளுங்கள்). அப்பொழுது சணல் வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின் மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடது கரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்... இப்பொழுது நாம் மிகவும் சரியாக பெற்றுக் கொள்கிறோம் தானியேலின் எழுபது வாரங்களைப் பற்றி ஆராய்கையில், அது எப்படி வெளியாகப் போகிறது என்பதை கவனியுங்கள். அப்போது தான் இரகசியமானது வெளிப்படுத்த படபோகிறது அவன்... (அவன் என்ற படர்க்கையில் உள்ள பிரதி பெயர்ச் சொல் இது. இது அந்திக் கிறிஸ்துவைக் குறிக்கும்) அவன் பரிசுத்த ஜனங்களின் வல்லமையை சிதறடித்தல் முடிவு பெறும் போதே... (அவன் வாரத்தின் மத்தியில் தன் உடன்படிக்கையை முறித்துப்போடும் போது இவ்வாறு செய்வான்)... இவையெல்லாம் நிறைவேறித்தீருமென்று என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையிடக் கேட்டேன்“ (ஆங்கில வேதாகமத்தில் ”அவன் பரிசுத்த ஜனங்களின் வல்லமையை சிதறடித்துத் தீரும் போது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது தமிழ் வேதாகமத்திலோ பரிசுத்த ஜனங்களின் வல்லமையை சிதறடித்தல் முடிவு பெறும் போதே“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ''அவன்'' என்று வார்த்தையே தமிழில் இல்லை - தமிழாக்கியோன்). நான் அதைக் கேட்டும், அதில் பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள்... (“முடிவு காலம்” என்று சபையார் கூறுகிறார்கள் - ஆசி) ஓ, நீங்கள் அதை மறக்க வேண்டாம்)... முடிவு காலம் மட்டும் புதை பொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்து கொள்ளுங்கள். தானி. 12:4-10. 66.கடைசி சபைக்காலத்தில் வரும் கடைசி கால செய்தியானது அதை வெளிப்படுத்தும். மகிமை! அதோ பார்த்தீர்களா? ஓ, என்னே! அதைப் பற்றி எண்ணுகையில் என்னை அது அசைக்கிறது. அந்த இரகசியங்களைப் பற்றி லெளகீக சபையானது கண்களை மூடிக் கொண்டு காணாதது போல் இருந்து கொண்டு, “அது அபத்தம்'' என்று கூறுகிறது. இயேசு கிறிஸ்துவைப் பற்றி இரகசியமானது என்னவெனில், அவர் தேவத்துவத்தில் மூன்றாம் ஆள் அல்ல, இரண்டாம் ஆள் அல்ல, மூன்றாம் ஆள் அல்ல, ஆனால் தேவன் என்ற நபரே, ஆளே அவர் தான். ஏனைய இரகசியங்கள் யாவுமே வெளிப்படுத்தப்படும். ஏனெனில் கடைசி கால சந்ததியினருக்கு இவைகள் யாவும் வெளிப்படுத்தப்படும் என்று அப்புஸ்தகத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. யூதர்களால் எவ்வாறு இயேசுதான்; மேசியா என்பதை காண இயலாமல் இருக்கிறதோ, அதே போலவே வேதக் கல்லூரிகளாலும், வேத ஆராய்ச்சி பள்ளிக் கூடங்களாலும், ஸ்தாபனங்களாலும் அதைக் காண இயலாமல் இருக்கிறது. உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று அவர்கள் எண்ணுகிறது ஒன்றும் ஆச்சரியமல்ல. நீங்கள் மூடத்தனமாயிருக்கிறீர்கள் என்று அவர்கள் நினைப்பது ஒன்றும் வினோதமானதல்ல. அவர்களுடன் நீங்கள் கொக்கரிக்காமல் இருப்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்லவே. ஏனெனில், அதன் பின்னால், ஒரு வல்லமையும், தரிசனமும் உள்ளது; ஒரு தேவனுடைய வார்த்தையும் வெளிப்படுத்தபட்டு, அதினால் சபையானது பரம வீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படுதலில் போவதற்காக அதை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வந்துள்ளது. ஆம் அநேகர், இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப் போம் நிச்சயமாகவே 67.அறியப்படுத்தப்படும் இன்னொரு காரியம் என்ன? இன்றைக்குள்ள இச்சபைகளைப் பாருங்கள். இதோ இப்படியாக இருக்கிறது. நான் புண்படுத்தவில்லையென்று நம்புகிறேன். ஆனால் நான் அதைக் கூறியாக வேண்டும். அந்நாளிலே ஒரு அந்திக்கிறிஸ்து எழும்புவான். இப்பொழுது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்; நாம் முத்திரைகளைப் பற்றி பார்க்கப் போகிறோம். அப்பொழுது, அந்திக் கிறிஸ்துவானவன் - தானியேல் வரப்போகிற அதிபதி என்று அவனைக் குறித்துக் கூறுகிறான் - அம்முத்திரைகளிலே, அவன் அக்குதிரைகளில் ஏறி சவாரி செய்து போகிறான். ஜனங்களுக்கு பாவ நிவிர்த்தி செய்ய இயேசுவானவர் சங்கரிக்கப்படுவார். ஆனால் பாழாக்கும் அருவருப்பை ஏற்படுத்த அவ்வதிபதியானவன் அதற்காக எழும்புவான். அச்செயலை செய்தது, தீத்துவின் மூலமாக (தீத்து என்னும் ரோம தளபதி - தமிழாக்கியோன்) ரோமாபுரியேயாகும். இந்தத் தடவையும், ரோமாபுரியிலிருந்து புறப்பட்டு வரப்போகும் ஒரு அதிபதி தான் அதைச் செய்யப் போகிறான். அவன் தானே கடைசி நாட்களிலே தன்னைத்தானே தேவனாக உயர்த்திக் கொண்டு வெளிப்படுவான். இப்பொழுது செவி கொடுங்கள். அதைப் பற்றி பரிசுத்த ஆவியானவர் 2 தெசலோனிக்கேயரில் நம்மை எச்சரிக்கிறார். நாம் 2 தெசலோனிக்கேயர் 2-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். அங்கே என்னுடைய வார்த்தை அல்ல, ஆனால் தேவனுடைய வார்த்தையே உங்களுக்கு இருக்கிறது. 2 தெசலோனிக்கேயர் 2-ம் அதிகாரம் 12-ம் வசனத்தை எடுத்துக்கொள்வோமாக. அவ்வசனத்திற்கு மேலிருந்து 7-ம் வனத்திலிருந்து துவக்குவோம். அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது... (இது பரிசுத்த ஆவியினாலே பவுல் பேசுவதாகும்)... ஆனாலும் தடைசெய்கிறவன் நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. (தடை செய்கிறவன் என்பது யார் என்று யாருக்காவது தெரியுமா? பரிசுத்த ஆவியானவர் தான் அந்த தடை செய்கிறவன் ஆகும்). நீக்கப்படுபோது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்... எப்பொழுது? பரிசுத்த ஆவியானவர் எடுக்கப்பட்டுவிடும் போது, இப்பொழுதே அவர் புறப்பட்டுப் போவதற்கு ஆயத்தமாக இருந்து கொண்டிருக்கிறார். எதற்காக அவர் புறப்பட்டுப் போகப் போகிறார்? தம்மோடு சபையை எடுத்துக் கொண்டு போவதற்காகத்தான். வெளிப்படுவான் (பவுல் ஆவியின் ஏவுதலினால் அங்கே பேசுகிறான்). அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார். (நிச்சயமாகவே அவன் அக்கிரமக்காரனே). அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடு “நாங்கள் தான் மகத்தான மாபெரும் சபை'' எங்களுக்கு இது இருக்கிறது அது இருக்கிறது'' என்பார்கள். இவர்கள் ஏற்கெனவே ஒன்றாக இணைந்துவிட்டார்கள். பார்த்தீர்களா? ''நாங்கள் தான் மகத்தான சபை'' - பொய்யான அற்புதங்கள். கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத் தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற் போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படுபடிக்கு. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத் தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். தெச. 2:7-12. அதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? ஓ என்னே! பவுல் பேசிக் கொண்டிருக்கிறார். தேவனுடைய முத்திரையானது தெரியப்படுத்தப்படும் பொழுது, அவருடைய ஆவியால் அது நடக்கும் பொழுது, அவரது நாமம், அவரது கிருபை, இப்பொழுது புறப்பட்டு வந்து கொண்டிருக்கிற இன்னுமுள்ள ஏனைய மகத்தான இரகசியங்கள் யாவும், எடுத்துக் கொள்ளப்படுதலில் அவருடைய சபையானது போவதற்காக அவருடைய திட்டங்களும் வெளிப்படுத்தப்படும். பரிசுத்த ஆவியானது ஊற்றப்படுதல் இதைச் செய்திருக்கிறது. இக்கடைசி நாட்களில் இதைதான் அவர் செய்திருக்கிறார். 68.இப்பொழுது. நாம் காண்போமாக, கடைசியாக உள்ளதை பார்ப்பதற்கு நமக்கு நேரமுள்ளதா? ஆறாவது மகா பரிசுத்த முள்ளவரை அபிஷேகம் பண்ணுவதற்காக ஓ என்னே! இதுதான் அது, கடைசியாக அவர் செய்ய வேண்டிய காரியமானது என்ன? இப்பொழுது நாம் தானியேலின் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு, அங்கே, இதில் அவர் செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்போமாக. மீறுதலைத் தவிர்க்கிறதற்கும் (ஜனங்களின் மீறுதல்கள்).... பாவங்களைத் தொலைக்கிறதற்கும்.... (ஜனங்களுக்காக)... அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும்... (யூதர்களுக்காக)... சற்று நேரத்திற்கு இருக்கக் கூடும். ஆனால் நான்... அதை (முடிவு காலம் மட்டும்)... மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும்... (இவைகள் தான் இந்த ஆறு விதமான நோக்கங்களோடு அவன் வந்தது)... என் ஜனத்தின் மேலும் உன் பரிசுத்த நகரத்தின் மேலும் எழுபது வாரங்கள்... (இந்தக் காலத்தில்தான் இவைகள் யாவும் செய்து முடிக்கப்படும்)... செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. தானி.9:24 69.இப்பொழுது, மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுவதற்காக. இந்த விஷயம் இங்குள்ள போதகர்களாகிய பலருக்கு சற்று வினோதமானதாக தரிசனத்தையும், தீர்க்கதரிசனத்தையும் முத்தரிக்கிறதற்கும் சற்று நேரத்திற்கு பொறுத்துக் கொள்ளுங்கள். எவ்வாறு அது வெளிப்படுகிறது என்பதைப் பாருங்கள். இது அபிஷேகம் பண்ணப்படுதலாகும்; ஒரு மனிதனையல்ல... இயேசுவானவர் ஏற்கெனவே அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளார். அப்படித்தானே? அப்போஸ்தலர் நடபடிகளின் புஸ்தகம் தேவன் இயேசுவை பரிசுத்த ஆவியால் அபிஷேகித்தார் என்றும், அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்து பிணியாளிகளைக் குணமாக்கினார் என்றும் கூறப்பட்டுள்ளது. (அப்.10:38). இயேசு ஏற்கெனவே... அவர் மேசியாவாயிருக்கிறார். மேசியா என்றால் ''அபிஷேகம் பண்ணப்பட்டவர்'' என்று அர்த்தமாம். அது சரிதானே? ஆனால் இங்கே கடைசி காலத்தில் அவர் மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணப்போகிறார். மகா பரிசுத்தமுள்ளது யார்? நான் அதைக் காண்கிறதின் படியே, அதை நான் வேத வாக்கியங்களினாலே நிரூபிக்க முடியும் என்று நம்புகிறேன். ஆகவே மகா பரிசுத்தமுள்ளதை அபிஷேகம் பண்ணுவதற்கு என்றால், ஆயிர வருஷ அரசாட்சியில் உபயோகிக்கப்படப் போகிற அக்கூடாரம் தான் அதுவாயிருக்கும். (இப்பொழுது செவி கொடுங்கள், அதை நான் ஏன் எடுத்துக் கொண்டேன் என்பதைக் காணுங்கள்). இக்கூடாரமானது எசேக்கியேல் 43-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. எசேக்கியேல் 43: 1-6 வசனங்கள். நான் எசேக்கியேலுக்குத் திரும்பிச் சென்று, ஆயிர வருஷ அரசாட்சியிலே எவ்வாறு அவர்கள் அபிஷேகம் பண்ணுவார்கள் என்பதை சித்தரிக்கிறார் என்பதை நான் கண்டு கொள்வோமாக. எசேக்கியேல் 43 அதிகாரத்தில் நாம் சிறிது வாசித்து, ஆயிர வருஷ அரசாட்சியில் அபிஷேகம் பண்ணுவதை, அவர் எப்படிச் செய்யப் போகிறார் என்பதை நாம் காண்போமாக. எசேக்கியேல் 43-ம் அதிகாரம் 1ம் வசனத்திலிருந்து 6-ம் வசனம் முடிய, நீங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போன பிறகு, அது முழுவதையும் நீங்கள் வாசித்துக் கொள்ளலாம். குறித்துக் கொள்கிறவர்கள் எசேக்கியேல் 43 என்று குறித்துக் கொள்ளுங்கள். பின்பு... 70.இப்பொழுது கவனியுங்கள். ஆயிர வருஷ அரசாட்சிலே கட்டப்படப் போகிற ஆலயத்தைப் பற்றி விவரக் குறிப்பு இது வேதத்தை அறிந்திருக்கிற எவருக்கும் எசேக்கியல் 40-ம் அதிகாரத்திலிருந்து 44-ம் அதிகாரம் முடிய உள்ள விஷயங்கள் பூமியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஆயிர வருஷ அரசாட்சி ஆலயத்தைப் பற்றியதேயல்லாமல் வேறு ஒன்றும் அல்ல என்பதை அறிவர். எவரும் அறிவர் அல்லவா? அப்பொழுது கர்த்தருடைய மகிமையானது அதை நிரப்பும். இப்பொழுது 43-ம் அதிகாரத்தில் 1 முதல் 6 முடிய வசனங்களில் உள்ள ஆலயத்தைப் பற்றி விவரக் குறிப்பை நாம் பார்க்கப் போகிறோம். பின்பு அவர் என்னைக் கீழ்த் திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக் கொண்டு போனார். இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது. நான் கண்ட இந்தத் தரிசனம் நகரத்தை அழிக்க வந்தபோது கண்ட தரிசனம் போல் இருந்தது; இந்தத் தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப் போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன். கர்த்தருடைய மகிமை கீழ்திசைக்கு எதிராக வாசல் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது. அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உட்பிரகாரத்திலே கொண்டு போய்விட்டது; இதோ கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று. அவர் ஆலயத்திலிருந்து என்னோடே பேசுகிறதைக் கேட்டேன்; அந்தப் புருஷன் என்னண்டையிலே நின்றிருந்தார். எசே. 43:1-6 71.அபிஷேகம் பண்ணுதல் - ஆயிர வருஷ அரசாட்சிக்காக அவ்வாலயத்தை அபிஷேகம் பண்ணுவித்தல். லேவியராகமத்தில் கவனியுங்கள். அது லேவியராகமத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதைக் கவனியுங்கள். நாம் இப்பொழுது லேவியராகமத்திற்குத் திரும்பிப் போவோமோனால், அங்கே மோசே ஆலயத்தை எவ்வாறு அபிஷேகித்தான் என்பதைக் காண்கிறோம். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, நாம் லேவியராகமத்திற்குத் திரும்பிப் போவோமாக. அதற்கு மட்டும் போதுமான நேரம் நமக்கு இருக்கிறது. மோசே ஆலயத்தை அபிஷேகம் பண்ணியதை பற்றி நாம் லேவியராகமத்தில் காண்போமாக. லேவியராகமம் 8-ம் அதிகாரம். திருவசனங்களை திருவசனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்குதலை நான் நேசிக்கிறேன். நீங்கள் அவ்வாறு நேசிக்கிறீர்களா? அப்படிச் செய்தால்தான் நாம் எதைக் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் குறித்து ஒரு சரியான புலப்படுதல் நமக்கு உண்டாகும். இப்பொழுது, நாம் இங்குமங்குமாக இதன் பேரில் வேத வாக்கியங்களை உபயோகிக்கிறோம் என்பதை எவரும் உணர்ந்து கொள்ள முடியும். 72.லேவியராகமம் 8-ம்அதிகாரம். நான் இங்கே 10-ம் வசனத்தை குறித்து வைத்துள்ளேன். லேவியராகமம் 8-ம் அதிகாரம் 10-வசனம். பின்பு மோசே, அபிஷேக தைலத்தை எடுத்து வாசஸ்தலத்தையும், அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம் பண்ணி, பரிசுத்தப்படுத்தி, அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணி முட்டுகளையும் தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படிக்கு அபிஷேகம் பண்ணி, அபிஷேக தைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம் பண்ணினான். லேவி.8:10-12. வனாந்திரத்திலே, அவர்கள் யாத்திரையிலே இருக்கும் போது, இஸ்ரவேலின் ஆராதனைக்குரிய வாசஸ்தலமாகிய கூடாரத்தை மோசே சுத்திகரித்தான் அல்லது அபிஷேகித்தான். அது அபிஷேகம் பண்ணப்பட்டது. 73.இப்பொழுது, நாளாகமத்தின் இரண்டாவது புஸ்தகத்திலே அந்தப் பிரதிஷ்டையைக் குறித்துக் காண்போம். அப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் கூடாரத்திலே தனது சிங்காசனத்தை எடுத்துக் கொண்டபொழுது, என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். 2 நாளாகமம், 5-ம் அதிகாரம் 13-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். 2நாளாகமம், 5-ம் அதிகாரம் 13-ம் வசனத்திலிருந்து அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏக சத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்தரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைக் தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற் போயிற்று, கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று. நாளா. 5:13-14 அபிஷேகம் பண்ணப்படும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் தேவன் உட்பிரவேசித்தார். மக்கள் வந்து அவரைத் தொழுகொள்ளும்படியாக அது அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆகவே, பரிசுத்த ஸ்தலத்தை அல்ல, மகா பரிசுத்தமுள்ள ஸ்தலத்தை அபிஷேகம் பண்ணுதல் என்றால்; புதிய எருசலேம் தான் மகாபரிசுத்த ஸ்தலம் என்று நாம் காண்கிறோம். தேவனிடத்திலிருந்து பரலோகத்தை விட்டு இறங்கும் புதிய எருசலேமின் மேல் அவ்வபிஷேகமானது தங்கியிருக்கும். தன் மணவாளனுக்காக அலங்கரிக்கட்டு ஆயத்தம் பண்ணப்பட்ட ஒரு மணவாட்டியைப் போல் இருக்கும் அவ்வபிஷேகம் அவர்கள் மேல் இருக்கும். 74.செருபாபேல் தன் ஆலயத்தைக் கட்டின பிறகு அதைப் பிரதிஷ்டை செய்தான். அது திரும்பவும் அபிஷேகம் பண்ணப்படவில்லை; ஏனெனில் அது ஏற்கெனவே அபிஷேகிக்கப்பட்டுவிட்டது. அது அழித்து தரைமட்டமாக்கப்பட்டு, பிறகு மீண்டும் எழுப்பி கட்டப்பட்டது அதற்கு அழிவு வந்தது. பிறகு மீண்டும் கட்டியெழுப்பட்டது. எனவே அதற்கு மேற்கொண்டு மறுபடியும் அபிஷேகம் பண்ணப்படுதல் செய்யப்படவில்லை. ஒரு தடவை அபிஷேகம் பண்ணப்பட்டதானது, கடைசி வரையிலும் அது செல்லும்படியாகத் தக்கதாக இருக்கிறது. இந்த காலம் வரையிலும் அது தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் தேவன் ஆயிரவருஷ அரசாட்சிக்குரிய கூடாரத்தை ஸ்தாபிக்கும் பொழுது, மகா பரிசுத்தமுள்ளதை அபிஷேகம் பண்ணுவார். பரிசுத்தமுள்ளதை அல்ல, மகா பரிசுத்தமுள்ளதை அபிஷேகம் பண்ணுவார். ஆனால் இராஜாவானவர் தனது சிங்காசனத்தை ஆயிரமாண்டுகளுக்கு எடுத்துக் கொள்ளும் பொழுது... மகிமை! அவள் - மகா பரிசுத்தமானது அபிஷேகம் பண்ணப்படுதல் தான் கடைசியாக இருக்கும். 75.அக்கூடாரமானது எழுப்படும்போது, உயிர்தெழுதல் நடந்திருக்கும், யூதர்கள் திரும்பியிருப்பார்கள் கிறிஸ்துவும் மணவாட்டியும் வந்திருப்பார்கள். 1,44,000 யூதர்கள் முத்திரையிடப்பட்டிருப்பார்கள். ஆயிரவருஷ அரசாட்சி ஆரம்பித்திருக்கும். மகா பரிசுத்தஸ்தலமானது அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கும். அது மகா பரிசுத்த ஸ்தலமாகும் - மகாபரிசுத்தமானது. மகா பரிசுத்த ஸ்தலம் என்னப்படுவது கேரூபீன்கள் மத்தியிலே தேவன் வாசம் பண்ணத்தக்க பரிசுத்த வாசஸ்தலமாக இருக்கிறது. இத்தடவை கிறிஸ்து தன் மேல் அபிஷேகத்தோடு மகா பரிசுத்த ஸ்தலத்தினுள்ளே தங்கியிருப்பார். அப்பொழுது அவர்களுக்கு சூரிய வெளிச்சம் தேவையாயிருக்காது. ஏனெனில் நகரத்தின் மத்தியில் வீற்றிருக்கும் ஆட்டிக்குட்டியானவரே அவர்களுக்கு ஒளியாயிருப்பார். அந்நகரத்திலே சூரியன் அஸ்தமிப்பதில்லை. அவ்வாறு வயதான அங்கிள் ஜிம் அவர்களும் கூறுவது வழக்கம். ஒரு போதும் அது அஸ்தமிக்காது, ஏனெனில் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவே அதற்கு ஒளியாயிருப்பார். இராஜாவானவர் வந்து, ஆயிரமாண்டுகள் அரசாளுவதற்காக சிங்காசனத்தை எடுத்துக் கொள்ளுவார். 76.எரேமியா 3:12-18-ஐ வாசிப்போமாக... எரேமியா 18-ம் அதிகாரம்... நான் கருதுகிறேன். ஆம்! இல்லை, மன்னித்துக் கொள்ளுங்கள், எரேமியா 12-ம் அதிகாரம், மன்னியுங்கள், எரேமியா 3-ம் அதிகாரம், இங்கே நான் குறித்து வைத்துள்ளேன். படித்துக் கொண்டு இருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இடமாக என்னை எடுத்துக்கொண்டே சென்றார். அப்பொழுது நான் என்னால் முடிந்த அளவு நன்றாக இவைகளை குறித்துக் கொண்டேன். எரேமியா 3:12-18. நாம் அதை வாசிப்போமாக. நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள்; என்னவென்றால் சீர் கெட்ட இஸ்ரவேலே திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் மேல் என் கோபத்தை இறங்கப் பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன். நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணி , பச்சையான சகல மரத்தின் கீழும்... (அதைத்தான், கிழக்கிலும், மேற்கிலும் இன்னும் உள்ள சகல தேசத்திலும் செய்திருக்கிறார்கள்). அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற் போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார். சீர்கெட்ட பிள்ளைகளே திரும்புங்கள்... (இதைக் கவனியுங்கள்... என்று கர்த்தர்; நான் உங்கள் நாயகர்; (ஆங்கிலத்தில் ''நான் உங்களுக்கு விவாகம் செய்யப்பட்டுள்ளேன்'' என்று உள்ளது - தமிழாக்கியோன்)... (விவாகம் செய்யப்பட்டு)... (அவர்களுடைய கண்கள் குருடாக்கபட்டது, ஏனெனில், நான் புறஜாதிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன், ஆனால் நான் உங்களை விவாகம் செய்து கொண்டபடியினால், நீங்கள் திரும்புங்கள்)... நான் உங்களை ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து... (யூதர்கள் என்று உங்களை அழைத்துக் கொள்கிறவர்கள் எல்லாம் அதில் பிரவேசித்து விடமாட்டார்கள். ஆனால் அந்த தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டம் மாத்திரமே உள்ளே பிரவேசிப்பார்கள். அவர்கள் தான் யோசேப்புக்கு முன்னால் நிற்கப் போகும் அந்த சின்ன பென்யமீனராவார்கள். அந்த கூட்டமான மக்கள், ஒவ்வொரு தேசத்திலும் இருந்தும், ஒவ்வொரு நகரத்திலிருந்தும், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் ஆவர்)... உங்களைச் சீயோனுக்கு அழைத்துக் கொண்டு வந்து, உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள். தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதுமில்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். அக்காலத்தில் எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்... (ஏனெனில் அவர் அங்கே வாசமாயிருப்பார், பார்த்தீர்களா?) சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதனிடமாகச் சேர்வார்கள்; (அல்லேலூயா) அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள். 77.அந்நகரமானது அபிஷேகம் பண்ணப்படும்போது அவ்வாறிருக்கும். அது புதிய எருசலேம் அபிஷேகம் பண்ணப்படும் போது அவ்வாறிருக்கும். அந்நகரத்திலுள்ள சகல ஜாதியாரும்... வெளிப்படுத்தின விசேஷம் 22-ம் அதிகாரம் கூறுகிறது. அந்நகரத்தின் வாசல்கள் இரவிலும் அடைக்கப்படுவதில்லை, ஏனெனில் அங்கே இரவே இருக்காது. பூமியின் இராஜாக்கள் யாவரும் தங்கள் கனத்தையும் மகிமையையும் நகரத்தினுள் கொண்டு வாருங்கள். அதின் மதில்கள் வச்சிர கல்லாலும் பதுமராகத்தாலும் இன்னும் இவ்விதமான பன்னிரண்டு இரத்தினக் கற்களாலும் செய்யப்பட்டிருக்கும். பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துகளாயிருக்கும் அங்கே அவர்களுக்கு விளக்குத் தேவையில்லை. அங்கே இனிமேல் சூரிய வெளிச்சம் இருக்காது; ஏனெனில் நகரத்தின் மத்தியில் ஆட்டுக்குட்டியானவரே அவர்களுக்கு வெளிச்சமாயிருப்பார். அவர் தான் ஜனங்களை நித்திய ஜீவனுக்குள் வழிநடத்துவார். அந்நதியின் இருகரையிலும், இக்கரையில் ஒன்றும், அக்கரையில் ஒன்றுமாக இரண்டு மரங்கள் இருக்கும். அவைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைவதற்காக உள்ளவைகளாகும். அதுதான் அந்த அபிஷேகம் பண்ணப்பட்ட அப்பரிசுத்த நகரமாகும். அது தேவனிடத்திலிருந்து பரலோகத்தை விட்டு பூமிக்கு இறங்கி வருகிறதாயிருக்கும். 78.அந்தக் காலத்தில் என்ன சம்பவிக்கும் என்பதைக் குறித்து நாம் இப்பொழுது பார்ப்போமாக. ஓ, நீங்கள் அதை நேசிக்கிறீர்களா? சற்று ஒரு நிமிட நேரம் ஏசாயா 65-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். இவ்வாறு இடையிடையே குறிப்பிட்டு மேற் சொல்லிக் கொண்டு போவது நல்லதாயிருக்கிறது. ஒருவேளை சற்று உஷ்ணமாயிருக்கலாம், ஆனாலும் நாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டேசெல்லுவோம். ஏசாயா 65-ம் அதிகாரம், அந்தக் காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் குறித்துக் கூறுகிறதாயிருக்கிறது. பாவியான நண்பனே, இதை இழக்கக் கூடுமோ என்பதை சிந்தித்து உம்மை அதைக் குறித்து கேள்வி கேட்டுக்கொள்ளக் கடவீர். ஏசாயா 65 அதிகாரம் 17-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போமாக. யாவரும் இப்பொழுது கவனமாய் செவி கொடுங்கள். இச்சம்பவம் ஆயிரவருஷ அரசாட்சியின்போது மகா பரிசுத்தமுள்ளது அபிஷேகம் பண்ணப்படும்போது உள்ளதாகும். இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை. மனதிலே தோன்றுவதுமில்லை நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களி கூர்ந்திருங்கள்; இதோ எருசலேமைக் களி கூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். (அது புதிய எருசலேமாகும். அபிஷேகமானது என்ன? கர்த்தருடைய மகிழ்ச்சியே அது). நான் எருசலேமின் மேல் களிகூர்ந்து... (இராஜா ராஜரீக மகத்துவமுள்ள நித்திய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், நித்தியமான ஜனங்கள், நித்திய சந்தோஷத்தோடு நித்திய நகரத்தினில் வாசமாயிருக்கின்றனர்)... நான் எருசலேமின் மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின் மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும் கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நாறு வயது சென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நரறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும்... (அதாவது நீங்கள் மரித்து, உங்கள் மகன் உங்கள் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளுதல்)... அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப் போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடே கூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே... (கேருபீன்களின் பின்னால் உள்ள அம் மகிமையான அபிஷேகம் அது)... நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும் போதே நான் கேட்பேன். ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும். சிங்கம் மாட்டைப் போல் வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும். அவைகள் தீங்கு செய்வதுமில்லை. கேடுண்டாகுவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். (இதை நீங்கள் இழக்கக்கூடுமா? இல்லை). ஏசா.65:17-25 79.சற்று பின்னால் திரும்பி செல்லுவோம், அங்கே ஏசாயா 11-ம் அதிகாரத்தில் 1 முதல் 9 முடிய உள்ள வசனங்களில் அதே காரியத்தையே பேசுகிறான். கடைசி நாட்களிலே பெண்கள் நடந்து கொள்ளும் முறையைக் குறித்து அவன் கண்ட பிறகு, மீண்டும் அவன் அங்கே ஒரு தரிசனத்தைக் காண்கிறான். இப்பொழுது ஏசாயா 11:1-9. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி... (அவர் யார்? கிறிஸ்து)... அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர் மேல் தங்கியிருப்பார். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும்,தமது காது கேட்டபடி தீர்ப்புச் செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்பு செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக் கச்சையுமாயிருக்கும். அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக் குட்டியோடே. (அது ஒரு வெள்ளாடு) படுத்துக் கொள்ளும்; கன்றுக்குட்டியும், பால சிங்கமும், காளை ஒருமித்திருக்கும், ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடி மேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக் கொள்ளும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங் குழந்தை விரியன் பாம்பு வளையின் மேல் விளையாடும். பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஏசா. 11:1-9 இதெல்லாம் புதிய எருசலேமில் நடக்கப் போகிறவைகளாகும். கிளை என்பது தாவீதின் கிளையைக் குறிக்கும். அவர் தானே கிளையும் சந்ததியாயுமிருக்கிறார். 80.இதற்குப் பிறகு மணவாட்டி தோன்றுகிறாள். எழுபது வாரங்களுக்குப் பிறகு, மணவாட்டி வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரத்தில் 1 முதல் 16 முடிய உள்ள வசனங்களில் தோன்றுகிறாள். அவள் மகத்துவமுள்ள இராஜாவாகிய தன் மணவாளனோடு வந்து சேருகிறாள். அவைகளெல்லாவற்றையும் நாம் பார்க்கப் போகிறோமோ இல்லையோ, எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு நமக்கு இருக்கிறது... எப்படியாயினும் இதன் ஒரு பாகத்தையாவது வாசிப்போமாக. இதற்குப் பிறகு இங்கு தான் மணவாட்டி வருகிறாள். ஆயிரவருஷ அரசாட்சி ஆரம்பித்த பிறகு, கிறிஸ்து மணவாட்டியோடு திரும்ப வருகிறார். 19-ம் அதிகாரம் 1 முதல் 16-ம் வசனம் முடிய. இவைகளுக்குப் பின்பு... (உபத்திரவ காலத்திற்குப் பிறகு, ஆபத்துக்களுக்குப் பிறகு, முத்திரைகளுக்குப் பிறகு, வாதைகளுக்குப் பிறகு, சாத்தான் கீழே தள்ளப்பட்ட பிறகு, ஆயிர வருஷ அரசாட்சி அமைந்த பிறகு, கவனியுங்கள்) இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள் அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத் தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித் தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக் கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும்... (அதுதான் அந்த பழைய வேசியான சபையாகும்). எழும்புகிறது என்றார்கள். இருபத்து நான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுது கொண்டார்கள். மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது. அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் போலவும் (சபையே செவி கொடு, இதோ இங்கே தான் நீங்கள் வருகிறீர்கள். 3-ம் அதிகாரத்தில் அவள் எடுக்கப்பட்ட பிறகு, இங்கே மீண்டும் வருகிறாள்). (6-ம் வசனம்) அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் போலவும், பெருவெள்ள இரைச்சல் போலவும், பலத்த இடிமுழக்கம் போலவும், ஒரு சத்தமுண்டாகி; அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார் (அல்லேலூயா, கவனியுங்கள், இப்பொழுது தான் ஆட்டுக் குட்டியானவரின் கலியாணம் வருகிறது. இதோ அவள் இங்கே தான் வருகிறாள்). நாம் சந்தோஷபட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக் கடவோம். ஆட்டுக் குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். (இதோ அவள் இங்கே வருகிறாள். மணவாட்டியும் மணவாளனும் வருகிறார்கள்) சுத்தமும் பிரகாசமுமான மெல்லியவஸ்திரம் தரித்துக் கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்; என்றெழுது என்றான். மேலும் இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படி செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக் குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரோடு கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக் குதிரை... (ஓ, என்னே!)... காணப்பட்டது. அதின் மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சந்தியமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன. (எப்படியாக அவர் கிரீடம் சூட்டப்பட்டார்? இராஜாதி இராஜாவாக) அவருக்கேயன்றி வேறொருவருக்குத் தெரியாத ஒரு நாமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரிந்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. (“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது; அந்த வார்த்தை தேவனாயிருந்தது; அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்...'') (யோவான் 1:1, 14 அவர் யார்? - இயேசு) அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். (மகிமை! இதோ அவர் வருகிறார்) புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக் கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும், அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது. வெளி 19:1-16 81.அது என்ன? அவருடைய ஜனங்கள் இப்பொழுது அவரை இராஜதி இராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக முடி சூட்டியிருக்கிறார்கள். அவர் தன் சபையோடு ஜீவித்து, ஆயிரமாண்டு அரசாட்சியில் ஆளுவதற்காக, தேவ பிரசன்னத்தினாலே அபிஷேகம் பண்ணப்பட்ட தமது பரிசுத்த ஆலயத்திற்கு திரும்பி வருகிறார். ஆமென்! மகத்துவமுள்ள இராஜாவோடு, அவரது பக்கத்திலே தன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டவளாய், அந்தப் புதிய ராஜரிக அபிஷேகிக்கப்பட்ட ஆலயமானது தோன்றுகிறாள். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 6:1 முதல் வெளிப்படுத்தின விசேஷம் 19:21 முடிய உள்ளவைகளில் பொதிந்து இருக்கும் ஆறுவிதமான நோக்கங்கள் நிறை வேறிவிட்டன. செவி கொடுங்கள்! 82.இப்பொழுது முடிவாக, ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், ஏழு வாதைகள், மூன்று ஆபத்துக்கள், சூரியனில் நிற்கிற ஸ்திரீ, சிவப்பான வலு சர்ப்பம் ஆகியவைகள் இந்தக் காலங்களுக்குள், மகா உபத்திரவ காலத்தின் வேளையில் வருகின்றன. இதை மறக்க வேண்டாம். இவைகள் யாவும் இந்த காலத்தில் சம்பவிக்கின்றன. ஆனால் இதோ இங்கேதான் இந்த ஆறுவிதமான நோக்கங்களுக்காக அவன் வருகிறான். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தரை நேசிக்கிறவர்களுக்கு என்னே ஒரு மகிமையான வேளையானது வைத்து வைக்கப்பட்டிருக்கிறது. நான் உங்களுக்குக் கூறுவது என்னவென்றால், நண்பர்களே! நீங்கள் இதை இழந்து போவது உங்களால் தாங்கிக் கொள்ள முடியாததாகும். நீங்கள் என்ன செய்த போதிலும், அதை இழந்துபோகவே கூடாது. அதைப் பற்றி உறுதியாயிருங்கள். 83.கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக் கிழமை, அவர் எனக்கு உதவி செய்வாரானால், அந்த ஏழு நாட்களும் ஒவ்வொன்றும் சரியாக எந்த இடத்தில் எப்பொழுது சம்பவித்தன என்பதைப் பற்றியும் சரியாக எந்த இடத்தில் எப்பொழுது சம்பவித்தன என்பதைப் பற்றியும், இன்றைக்கு நான் போதித்தது போல் இவைகளைக் கொண்டு வந்து, அவ்வெழுபது வாரங்களை யூதர்களின் வாசஸ்தலத்தில் ஸ்தாபித்து, நாம் இப்பொழுது இக்கடைசி காலத்தில் எங்கே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையெல்லாம் கர்த்தருக்கு சித்தமானால், உங்களுக்கு அளிக்க நான் விரும்புகிறேன். 84.நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? பரலோகத்தில் இழக்க உங்களுக்கு சக்தியிருக்கிறதா? நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். அவர் எதைச் செய்ய வரப்போகிறார்? முதலாவதாக என்ன நடைபெறும்? இயேசு பூமிக்குத் திரும்ப வருவதற்கு முன்னர் முதலாவதாக நடைபெறும் காரியம் என்னவாயிருக்கும்? சபைக்கு என்ன நடக்கும்? அது எடுக்கப்பட்டுவிடும். இயேசு பூமிக்குத் திரும்பி வந்து, கல்லறைகளிண்டையிலே சுற்றித் திரிந்து, அப்பா, அம்மாக்களோடு கை குலுக்கிவிட்டு, நம் யாவரோடும் பேசிக் கொண்டிருந்து விட்டு, மேலே ஏறிப் போய்விடுவாரா? இல்லை. அது எப்படியிருக்கும் “கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது; கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் (2 தெசலோனிக்கேயர் 5-ம் அதிகாரம்) இந்த இடத்தில் (1 தெசலோனிக்கேயர் 4-ம் அதிகாரம் என்று தான் இருக்கவேண்டும் - தமிழாக்கியோன்)... ''கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை...” (1 தெச 4:15). தேவ எக்காளம் தொனிக்கும். ''...அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்“ (1 தெச 4:16). ”பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டுபோக... அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு (1 தெச. 4:17) விடுவோம்.“ ...”ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்'' (1. கொரி.15:51). அந்த வேளையிலே... அவ்வேளை தான் சபைக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது. பிறகு, இங்கே கீழே பூமியிலே தேவன் யூதர்களோடு இடைபட ஆரம்பிக்கிறார். 85.அப்பொழுது அங்கே இரு தீர்க்கதரிசிகள் இருப்பார்கள். (11-ம் அதிகாரத்தில் (வெளி. 11-ம் அதிகாரம் - தமிழாக்கியோன்) அதை நாம் எடுத்துக் கொள்வோம்). அவர்கள் இரண்டு அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளாவர். அவர்கள் இருவரும் எலியாவும் மோசேயும் தான் என்றும் நான் கருதுகிறேன். அவர்கள் யாவரும் ஒருங்கிணைந்து கொண்ட பிறகு, ரோமாபுரியானது இஸ்ரவேலோடு உள்ள உடன் படிக்கையை எழுபதாவது வாரத்தின் மத்தியிலே முறித்துப் போட்டதை அவர்கள் (இரு தீர்க்கதரிசிகள் - தமிழாக்கியோன்) காணும் போது, அப்பொழுது அவர்கள் மகா சாபங்களைக் கொண்டு வருவார்கள். உடன்படிக்கை முறித்தலானது வல்லமையை சிதறடிக்கும் அருவருப்பை உண்டாக்கும். புறஜாதியில் மீதியாயிருக்கும் நித்திரை செய்யும் கன்னியர் இருக்கும் பொழுது, பெரிய வெள்ளம் உண்டாகும். ரோமாபுரியாகிய வலுசர்ப்பம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும், மீதியாயிருக்கும் ஸ்திரீயின் வித்தோடு தன் வாயிலிருந்து நதி போன்ற வெள்ளத்தை ஊற்றிவிட்டு, யுத்தம் பண்ணப்போகும். 86.அனைத்து சபைகளின் சமஷ்டி அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அது அவர்கள் யாவரையும் ஒருங்கிணைத்து, யூதர்களையும் இந்த சபைகளின் சங்கத்தினுள், சமஷ்டிக்குள், கொண்டு வருவார்கள். அவர்களை அவர்களுடைய ஆலயத் தொழுகைக்கு வரும்படி செய்து, வேதத்திலிருந்து கர்த்தர் உரைப்பது என்னவென்றால் என்பதை மீண்டும் ஏற்படுத்துவார்கள். அவர்களுக்கு அவர்களுடைய சொந்த சபை உண்டாயிருக்கும். இபொழுது அவர்கள் என்னவாயிருக்கிறார்கள்? இப்பொழுது நான் புதியதாக தெரிந்து கொண்டேன். அவர்கள் இப்பொழுது ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அது சரிதானே? ஆனால் இன்னமும் அவர்களுக்கு ஆலயத்தொழுகை ஏற்படவில்லை. அவர்கள் ஆலயத் தொழுகையை ஏற்படுத்திக் கொள்ளும் போது, சபையானது இங்கிருந்து போய்விட்டிருக்கும். தேவன் அப்பொழுது யூதர்களோடு ஒரு தேசமாக இடைபட்டுக் கொண்டிருப்பார். பிறகு அவர்கள் இந்த சமஷ்டி அமைப்புக்குள் கொண்டு வரப்படுகையில், ரோமாபுரியானது எழுபதாவது வாரத்தில் மீதி பாதியில் அந்த மூன்றரை வருஷத்தில் அவர்களோடு உள்ள உடன்படிக்கையை முறித்துப்போடும். பின்பு பாழாக்கும் அருவருப்பை முடிவு பரியந்தமும் அவன் பரப்பிக் கொண்டேயிருப்பான். அப்பொழுது அவன் ப்ராடெஸ்டெண்டுகள், யூதர் ஆகிய இரு சாராரையுமே உபத்திரவப்படுத்துவான்; அவ்வேளையிலே இரண்டு தீர்க்கதரிசிகள் எழும்பி அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வரும் நாட்களிலே பூமியிலே மழை பெய்யாதபடி பூமியை சபிப்பார்கள்; இன்னும் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தல் போன்றவைகளையெல்லாம் அவர்கள் செய்வார்கள். நீங்கள் சற்று பொறுத்திருங்கள். நாம் கற்றுக் கொள்வதற்காக இங்கே ஏராளமான விஷயங்கள் வைக்கப்பட்டு இருந்து கொண்டிருக்கிறது. 87.ஓ, அவர் எவ்வளவு மகத்தான தேவனானவர் என்னே ஒரு இரக்கமுள்ள பிதா அவர்! சிநேகிதரே, உங்களுடைய மேய்ப்பன் என்ற முறையில் நான் இதைக் கூறுவேனாக. நீங்கள் எப்படிப்பட்ட சிலாக்கியங்களுக்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரவேயில்லை. நீங்கள் உணரவேயில்லை.அநேக மகத்தான மனிதர்கள், அநேக பரிசுத்தவான்கள், ஆயிரக்கணக்கான பரிசுத்த மனிதர்கள், கடந்து போன அநேக ஆண்டுக் காலங்களில் மரித்துப்போய்விட்டனர். ஆவியால் நிரப்பட்ட அம்மனிதர்கள் நீங்கள் வாழ்கிற நாட்களைக் காண வேண்டுமென மிகவும் விரும்பியிருந்தார்கள். நீங்களும் நானும் அதைப் பயன்படுத்திக் கொள்வோமாக. இன்னும் எதை நாம் எதிர் நோக்கி இருக்க வேண்டியதிருக்கிறது? இதற்குப் பிறகு நம்மால் என்ன செய்ய முடியும்? நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்ன சம்பவிக்கப் போகிறது. நாம் ஒரு இடத்திற்குப் போக வேண்டியவர்களாக இருக்கிறோம். இங்கே நிரந்தரமாக நீங்கள் தங்கியிருக்க முடியாது. உங்களுடைய புல்லை நீங்கள் அறுக்கக்கூடும். அடுத்த வாரம் மீண்டும் புல்லையறுக்க வேண்டியது உள்ளது. அந்த நேரத்திற்கு இரு தடவைகள். நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்கலாம். அவர்களுக்கு மதிய உணவு அளிக்கிறீர்கள். மீண்டும் இரவு உணவு வேளையில் அவர்களுக்கு பசி வந்துவிடுகிறது. இரவு உணவு அவர்களுக்குப் போஷிக்கிறீர்கள். மறு படியும் அடுத்த நாள் காலையில் அவர்களுக்கு மீண்டும் பசி வந்துவிடுகிறது. ஒரு ஜோடு பாதரட்சைகள் அவர்களுக்கு வாங்குகிறீர்கள்; என்னை போல்அவர்களுக்கு இருக்குமானால், இரண்டு மூன்று மாதங்களுக்குள் இன்னொரு ஜோடு செருப்புகள் வாங்குகிறீர்கள். ஒன்றிரண்டு மாதங்களில் மீண்டும் புதிய ஆடைகளை அவர்களுக்கு நீங்கள் வாங்க வேண்டியதாகிவிடுகிறது. ஒன்றும் நீடித்து இங்கே இருப்பதில்லை. ஒன்றும் நிரந்தரமானதாக இருக்கவில்லை. நிலைத்திருப்பது இங்கே ஒன்றுமில்லை. விரைவில் கெட்டுப்போகும் இவ்வுலகின் மாயையான ஐசுவரியங்களை இச்சியாதீர் ஒருக்காலும் ஒழிந்து போகாத நித்தியமானவைகளின் பேரில் உங்கள் நம்பிக்கையைக் கட்டுவீர் காலமானது விரைவான மாற்றங்களை கொண்டது. பூமியில் யாவும் மாயை, அசையாதவைகள் நிலைக்குமே நித்தியமானவைகளில் உங்கள் நம்பிக்கையை கட்டுவீர் தேவனுடைய மாறாத கரத்தை பற்றிக் கொள்வீர் தேவனின் மாறாக் கரத்தைக் பற்றிக் கொள்வீர் தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டி தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் கேளுங்கள்! நாம் யாத்திரை முடியும்போது (அப்பொழுது அது முடிந்து விட்டது என்பதை அவர் நமக்குத் தெரியப்படுத்துவார்) நாம் தேவனுக்கு உண்மையாயிருந்தால் மகிமையில் நமக்கு அழகும் பிரகாசமுமான பரம வீடு உண்டே (அந்த அபிஷேகிக்கப்பட்ட நகரம்) ஆனந்த பரவசமாக்கப்பட்ட நமது ஆத்துமா அதைக் காணுமே தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் தேவனின் மாறாக் கரத்தைக் பற்றிக் கொள்வீர் நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டி தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் இவ்வுலகின் வீணான செல்வங்கள் விரைவில் அழியுமே, அவற்றின்மேல் இச்சை வைக்காதீர் நித்தியமானவைகளிலே உம் நம்பிக்கையைக் கட்டுவீர் அவைகள் ஒருபோதும் ஒழிந்து போகாது. தேவனின் மாறாக் கரத்தைக் பற்றிக் கொள்வீர் தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டி தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் நாம் தலைகள் வணங்கும் போது, நீங்கள் இதுவரையிலும் ஒருக்காலும் அவருடைய கரத்தை பற்றிக் கொள்ளாது இருப்பவராய் இருப்பீரானால், இப்பொழுதாகிலும் அதைச் செய்ய வரமாட்டீரா? தேவனின் மாறாக் கரத்தைக் பற்றிக் கொள்வீர் தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டி தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் 88.வாலிபப் பெண்களே, நீங்கள் இப்பொழுது அழகான இனிமையான பெண்களாக இருக்கிறீர்கள். உங்களுடைய தலைமுடி அழகாயுள்ளது; உங்கள் கன்னங்கள் ரோஜா மலர்களைப் போல் உள்ளது; ஆனால் நாளைய தினம் என்று ஒன்று உள்ளது; அப்போது அவைகள் வாடிப்போகும். அடுத்த வாரத்தில் இந்த அழகான சிவப்புக் கன்னங்களை பூச்சி தின்று கொண்டிருக்காது என்று எப்படி நமக்குத் தெரியும்? வாலிப சகோதரனே, நீ பெலமுள்ளவனாக இருக்கிறாய், பெரிய பெலமுள்ள தசைகள் உனக்கு உண்டு. உனக்கு பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் கொஞ்சக் காலத்திலே, நாளைக்கே, அவ்வழகான சுருள் முடிகளெல்லாம் விழுந்துவிடும். மீதமிருப்தோ நரைத்துவிடும். அப்பெரிய நிமிர்ந்த தோள்கள் எல்லாம் கூனிவிடும், கைகளில் உள்ள மாமிசத்தையோ பூச்சி தின்று கொண்டிருக்கும். அவைகள் உன்னை மண்ணுக்கு மண்ணாக ஆக்கிவிடும். நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டுவீர் அவைகள் ஒருபோதும் ஒழிந்து போவதில்லை தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் (இப்பொழுது உம் கரத்தை நீட்டி அவர் கரத்தைப் பற்றிக் கொள்ளமாட்டீரா?) நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டுவீர் தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் இவ்வுலக யாத்திரை முடிகையில் (ஏதாவது ஒரு நாளிலே அது முடியும்) தேவனுக்கு நீர் உண்மையாயிருந்தால் மகிமையில் நமக்கு அழகும், பிரசாகமுமான வீடுண்டே ஆனந்த பரவசமாக்கப்பட்ட நமது ஆத்துமா அதைக் காணுமே! (நீர் ஏன் அதை செய்யக்கூடாது?) தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டி தேவனின் மாறாக்கரத்தைப் பற்றிக் கொள்வீர் 89.ஏறத்தாழ எனது முப்பத்தியொரு வருட ஊழிய காலத்தில், அநேகக் சாட்சிகளை நான் கண்டிருக்கிறேன். வேதனையான சாட்சிகளைக் கண்டிருக்கிறேன். மகிமையான காட்சிகளையும் கண்டிருக்கிறேன். தெருக்களில் பசியோடு அலைகிற குழந்தைகளையும், ஒரு துண்டு ரொட்டிக்காக பிச்சையெடுக்கும் தாய்மார்களையும் குறித்து வருந்தத்தக்க காட்சிகளை நான் என் வாழ்க்கையில் எந்த அளவுக்கு கண்டேனோ, அதை விட வருந்தத்தக்க காட்சியாக மனிதன், தான் தேவனுடைய புத்திரனாக வேண்டும் என்று விரும்பிய போதிலும், தேவனை அறியாமல் மரித்துக் கொண்டிருக்கும் காட்சிதான் வாழக்கையிலேயே நான் கண்ட மிக மிக வருத்தம் தரும் காட்சியாகும். 90.இந்த சபையின் கட்டிடத்தின் முகப்பில், ஒருநாள் ஒரு ஸ்திரீயானவள் நின்று கொண்டு, ''இந்த ஆள் (சகோ. பிரான்ஹாமை அந்த ஸ்திரீ குறிப்பிடுகிறாள் - தமிழாக்கியோன்) கொண்டிருக்கிற மார்க்கத்தை, என் வீட்டுப் பசுமாடு கூட பின்பற்ற நான் விடமாட்டேன்'' என்று என்னைப் பார்த்துப் பரிகசித்து கூறினாள். ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் என்னை ஒரு மருத்துவமனைக்கு வந்து பார்க்கும்படி அழைப்புவிடுத்தார்கள். இருபத்திரண்டு வயது மதிக்கதக்க அவ்வழகான ஸ்திரீ, ''அந்தப் பிரசங்கியாரை கூப்பிடுங்கள்'' என்று கதறினாள். அவன் கத்தோலிக்க மார்க்கத்தை பின்பற்றியவள். நான் அங்கே உள்ளே நுழைந்த போது, அங்கிருந்து ஒரு வயதான பெண்மணி, “சகோ. பிரான்ஹாம் நீங்கள் தாமதித்து வந்திருக்கிறீர்கள். ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக அவள் மரித்துப் போய்விட்டாள்'' என்று கூறினார்கள். ''நான் அவளைப் பார்க்கலாமா?'' என்று கேட்டேன். ''அவள் உம்மைத் தேடி கதறினாள், அவன் கடைசியாக கூறியது, ''அந்தப் பிரசங்கியார், சகோ. பிரான்ஹாமை அழையுங்கள்'' என்பது தான். அவளுடைய கணவன் அங்கே அலறிக் கொண்டிருந்தான். ''அவளுக்காக ஒரு ஜெபத்தைச் சொல்லும், அவளுக்காக ஒரு ஜெபத்தைச் சொல்லும்'' என்றான். “இப்பொழுது மிகவும் பிந்திவிட்டது'' என்று நான் கூறினேன். அவளை மூடியிருந்த போர்வையை விலக்கிப் பார்த்தேன். பெரிய பழுப்பு நிறக் கண்களை உடையவளாய் அவ்அழகான பெண்ணாக இருந்தாள். முகத்தில் தவிட்டு நிறமுள்ள புள்ளிகள் உண்டாயிருந்தன; அவளது முடி செம்பொன் நிறத்தில் இருந்தது. அவள் மிகவும் அழகுள்ளவளாய் இருந்தாள். அவளுக்கு முதலில் உண்டாயிருந்த அந்த தவிட்டு நிறப் புள்ளிகள் பெரிய பருக்களைப் போல் முகத்தில் பருத்து நின்று வேதனையுண்டாக்கி, அதனால் அவள் மிகவும் அவதிப்பட்டிருக்கிறாள், இறப்பதற்கு முன்னால், அவளது கண்கள், கண் குழியிலிருந்து வெளியே பிதுங்கி வீங்கிய நிலையில் இருந்தது. மரித்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு நபருக்கும் குடலும், சிறுநீரகமும் சற்று நேரம் வேளை செய்து கொண்டிருப்பது உண்டு, அவ்வாறே அவளுக்கும் இயங்கிக் கொண்டிருந்தன. அவளது வாய் திறந்திருந்தது. அவளது இமைகள் பாதி திறந்திருந்தது, அதினால் பழுப்பு நிறக்கண்கள் சற்று வெளியே தெரிந்து கொண்டிருந்தது. அதை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. அந்தப் பாட்டு என் நினைவுக்கு வந்தது. ''இவ்வுலகின் வீணான செல்வங்களை இச்சியாதீர்“ 91.போர்ட் ஃபுல்ட்டன் என்ற இடத்தில் மரித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனின் அருகில் நான் நின்றிருந்தேன். அவனது படுக்கையண்டையிலே என்னை வரும்படி அழைத்தார்கள். அதற்கு முன்பாக ஓர் இரவில் இங்கேயுள்ள பீடத்தண்டையிலே நான் அவரோடு ஜெபித்துக் கொண்டிருக்கையிலே, அவர் ஒரு ஸ்திரீயின் மேல் கையைப் போட்டவராக நின்றிருந்தார். ''அந்தப் பெண்மணி மீதிருந்து உமது கையை எடும்'' என்று நான் கூறினேன். ''நான் அவளை தேவனிடம் நடத்திக் கொண்டிருக்கிறேன்'' என்று அவர் பதிலளித்தார். ''உம்முடைய கரத்தை அவள் மேல் போட்டுக்கொண்டு அதைச் செய்ய முடியாது'' என்று நான் கூறினேன். ''அவ்விதமான அபத்தங்களை நான் விசுவாசிக்கவில்லை'' என்று நான் கூறினேன். அவருக்கு கோபம் வந்தது; அவர் கதவை காலால் ஓங்கி மிதித்து தள்ளிவிட்டு வெளியேறினார். அதற்கு சற்று நேரத்திற்குப் பிறகு அவர் மரித்துக் கொண்டிருந்தார். நான் அவ்வேளையில் அவரண்டையிலே சென்றேன். அவர் என் முகத்தைப் பார்த்து, “எனக்காக ஜெபிக்க வேண்டாம். சகோதரன் பிரான்ஹாமே, நான் கெட்டுப் போனேன். நான் காணாமற் போய்விட்டேன்'' என்று கூறினார். ''நான் ஆதாயப்படுத்தியதையெல்லாம் இழந்துவிட்டேன்'' என்று கூறினார். 92.இங்கிருந்து அருகில் அந்த மூலையில் உள்ள ஒரு இடத்தில் நான் மரித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனால் அவனது படுக்கண்டையிலே அழைக்கப்பட்டு அங்கே நின்றிருந்தேன். ''நான் எப்பொழுதும் இன்னின்ன காரியத்தை விரும்பினவனாக இருந்தேன். ஆனால் நான் கர்த்தரை சேவிக்கவில்லை. அநேக சமயங்களில் பீடத்தண்டையில் போக விரும்பாமல் நான் இருந்துவிட்டேன். சகோ. பிரான்ஹாம் அவர்களே, நான் செய்த கிரியைகளை விட்டு நீங்கியிருக்கும் என் மகளாவது கர்த்தருக்கென்று ஏதாவது செய்ய தேவன் அவளுக்கு உதவும்படி நீங்கள் அவளுக்காக ஜெபியுங்கள்“ என்று கூறினார். ''அவ்வாறு செய்ய இயலாது. சகோதரனே, நீர் செய்ய இருந்த காரியங்களெல்லாம் இழந்து போகப்பட்டுவிட்டனவே'' என்றேன் நான். 93.இன்னொரு மனிதண்டையில் நான் உட்கார்ந்திருந்தேன். அவன் இருபத்து நான்கு மணி நேரமாக பிசாசுகளோடு போராடிக் கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் தன் படுக்கையண்டையிலே பிசாசுகள் நின்று கொண்டிருப்பதாகவும் தன் கழுத்தை சங்கிலியால் பிணைந்திருப்பதாகவும் கூறினான். ''அவைகளை என்னை நெருங்க விடாதீர்கள்'' என படுக்கையில் படுத்துக் கொண்டு அம்மனிதன் கதறி அலறினான். ''அதோ அங்கே நிற்கிறது. உம்மால் காண முடியவில்லையா? அது என் பின்னால் வந்து கொண்டிருக்கிறது'' என்று கதறினான். அவன் தேவனை வெகு காலமாக தள்ளிவிட்டான். அவனிடம் தானியத்தால் நிரம்பிய பெரிய களஞ்சியங்களும், வைக்கோலும், அருமையான பந்தயக் குதிரைகளும் இருந்தன. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக அவன் தேவனை நேரடியாகவே சபித்தும், இக்கூடாரத்திற்கு வந்து கொண்டிருந்ததற்காக தன் மனைவியை கன்னத்தில் அறையவும் செய்திருந்தான். என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? மின்னல் அவனது களஞ்சித்தை அடித்தது. வைகோலெல்லாம் எரிந்து போய்விட்டது. அவனது குதிரைகள் அப்பொழுது கொல்லப்பட்டுவிட்டன. தன் மேலிருந்து பிசாசுகளோடு அவன் போராடிக் கொண்டிருந்தான். அவன் அசுத்த ஆவிகளின் ஆதிக்கத்தில் வசியப்பட்டு அதனால் மரித்துப் போனான். 94.வயதான என் நண்பரொருவர் - அவர் இப்பொழுது அக்கரையில் நின்று கொண்டிருக்கிறார் (மகிமை!) - அவர் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் வந்தபோது, ''தந்தையே, நீர் புறப்பட்டுவிட்டீரா?“ என்று நான் கேட்டேன். ''அதுதான், பில்லி'' என்றார் அவர். “அது எவ்வாறிருக்கிறது?'' என்று நான் கேட்டேன். ''எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கிறது'' என்றார். “என் படுக்கையருகில் பிள்ளைகளையெல்லாம் கொண்டு வாருங்கள்'' என்றார். பெலவீனமான தன் கரங்களை அவரது பிள்ளைகள் ஒவ்வொருவர் மேலும் வைத்து அவர்களை ஆசீர்வதித்தார். தன் இரண்டு மகன்களிடமும், ''என் கரங்களை யோசுவாவும் காலேபும் செய்தது போல் உயர்த்திப் பிடியுங்கள்'' என்று கூறினார். அவர் என்ன கூறப் போகிறாரோ என்று நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் கூறினார். இன்ப நாள், இன்ப நாள், என் பாவம் தீர்ந்து போன நாள் பேரன்பர் என்னை இரட்சித்தார் சீராக்கி இன்பம் நல்கினார் அவ்விதமான காரியங்கள் நமக்கு வரவேண்டியதாயுள்ளது, சிநேகிதரே, நல்ல உணவை உண்ணவும், அருமையான மோட்டார் வாகனத்தை ஓட்டிச் செல்லவும், இன்னும் என்னவெல்லாம் நல்லதும் அருமையுமானவைகளாக உள்ளனவோ, அவைகளைப் பெற்றிருக்கவும் விரும்பாதோர் யாரும் இல்லை. அதற்காக நான் உங்களை குற்றப்படுத்தவில்லை. அவையெல்லாம் சரிதான். நீங்கள் அதைப் பெற்றிருக்க தேவனும் விரும்புகிறார். ஆனால்... இவ்வுலகின் மாயமான செல்வங்களை இச்சியாதீர் அவைகள் விரைவில் கெட்டுப் போகுமே நித்தியமானவைகளின் மேல் உங்கள் நம்பிக்கையை வளர்ப்பீர் அவைகள் ஒரு போதும் ஒழிந்து போவதில்லை. நாம் இப்பொழுது பாடும் போது நம் கரங்களை உயர்த்து வோமாக. 95.நாம் நிற்கையில், சுற்றிலும் திரும்பி, யாருடனாவது கைகுலுக்குங்கள். இன்னும் சற்று நேரத்திற்கு நாம் இவ்வாராதனையைத் தொடரப் போகிறோம். ஆனால் அப்பாடலின் இன்னொரு சரணத்தை நாம் பாடுகையில், சுற்றிலும் திரும்பி நின்று கைகுலுக்குவோமாக. தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக் கொள்வீர் (தாயே, அதைச் செய்யுங்கள், தந்தையே அதைச் செய்யுங்கள்) தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள்வீர் (பிள்ளைகளே அதைச் செய்யுங்கள், சகோதரர்களே அதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் சகோதரர்களே) நித்தியமானவைகளின் பேரில் உங்கள் நம்பிக்கையை கட்டுவீர் தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள்வீர். 96.அவர் நிமித்தமாக நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? அப்படியானால் 'ஆமென்' என்று கூறுங்கள். (சபையோர் ''ஆமென்“ என்று மாறுத்தரம் சொல்லுகிறார்கள்) அவரை நேசிக்கிறவர்கள் யாவரும் ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறக் கடவர்கள். (சபையார் யாவரும் ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்'' என்று கூறுகிறார்கள்). நாற்சதுரமான அந்தப் பரம நகரத்திற்குப் போகப் போகிறோம் என்று விசுவாசிக்க கூடியவர்கள் யாவரும் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். (உங்கள் பாடல் பாடுதலோடு, உயர்த்தியவாறே இருங்கள்). அவ்வழகிய பரம் நகரம் போக நான் ஆயத்தமாயுள்ளேன் (அது இப்பொழுது எவ்வாறு இருக்கிறது) கர்த்தர் அதை தன் மக்களுக்காக ஆயத்தம் செய்தாரே அங்கே வெள்ளை சிங்காசனத்தைச் சுற்றி நின்று மீட்கப்பட்டோர் யாவரும் மகிமையாய்ப் பாடுவர் சில வேளை, என் பரம வீடாம் பரலோகம் போக ஏங்கித் தவிக்கிறேன் அங்கே நான் மகிமையை நோக்குகைகயில் அது என்னே ஒரு மகிழ்ச்சியானதாய் இருக்கும் அப்போது நான் என் இரட்சகரைக் காண்பேனே அப்பொண்ணான நகரத்திலே. அதை நீங்கள் விரும்பவில்லையா? அவ்வழகிய பரம நகரம் போக நான் ஆயத்தமாயுள்ளேன் கர்த்தர் அதை தன் மக்களுக்காக ஆயத்தம் செய்தாரே அங்கே காலந்தோறும் மீட்கப்பட்டோர் வெண் சிங்காசனத்தைச் சுற்றி நின்று மகிமையாய்ப் பாடுவர் பரலோகம் பரம வீடு போக நான் ஏங்கித் தவிக்கிறேன் அங்கே நான் காணும் ஆனந்தம் எத்தனை ஒரு மகிழ்ச்சியானதாய் அது இருக்கும் அப்போது நான் என் இரட்சகரைக் காண்பேனே அப்பொன்னான நகரத்திலே. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அப்படியானால்... இயேசுவின் நாமத்தை எடுத்துப்போ உடன், துயர், பகை வாட்டும் குழந்தையே, அதுதான் இன்ப சுகம் தந்திடும் எடுத்துப் போ எங்கு போயினும், விலையிலா நாமமது, எத்தனை இனியது (விலையேறப் பெற்ற நாமமது) பூவின் நம்பிக்கை, பரத்தின் ஆனந்தம் விலையிலா நாமமது, எத்தனை இனியது பூவின் நம்பிக்கை, பரத்தின் ஆனந்தம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கர்த்தருக்கு சித்தமானால் சரியான நேரத்திற்கு வர நாம் முயற்சிப்போம். அதை மறந்துவிட வேண்டாம். வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்காக. அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு. இயேசுவின் நாமத்தில் அவர் பாதத்தில் வீழ்ந்து அவரை வணங்கி பணிந்து கொள், நம் யாத்திரை முடிகையில் பரத்திலே அவரை நாம் இராஜாதி இராஜாவாக முடிசூட்டுவோமே விலையிலா நாமமது, எத்தனை இனியது (ஓ எவ்வளவு இனிமையானது) பூவின் நம்பிக்கை, பரத்தின் ஆனந்தம் அது விலையிலா நாமமது, எத்தனை இனிமையது (விலையில்லா நாமமது) பூவின் நம்பிக்கை, பரத்தின் ஆனந்தம் அது. இந்த வரிகளைக் கவனியுங்கள்: இயேசுவின் நாமத்தில் அவரைப் பணிந்திடுவீர் அதுவே கண்ணிகளுக்கெதிரான கேடயமாம் சோதனைகள் உன்னைச் சூழ்கையில் அப்பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரிப்பாய் (அதுவே போதுமானது) இயேசுவின் நாமத்தை எடுத்துப் போ உடன், துயர், பகை வாட்டும் குழந்தையே, அதுதான் இன்ப சுகம் தந்திடும் எடுத்துப் போ எங்கு போயினும், விலையிலா நாமமது, எத்தனை இனியது (விலையேறப் பெற்ற நாமமது) பூவின் நம்பிக்கை, பரத்தின் ஆனந்தம் விலையிலா நாமமது, (விலையேறப் பெற்ற நாமம்) ஓ, எத்தனை இனிமையானது அது. பூவின் நம்பிக்கை, பரத்தின் ஆனந்தம் இப்பொழுது, நான் இவ்வாரதனையை மேய்ப்பனாகிய சகோதரன் நெவில் அவர்களிடம் கொடுக்கிறேன். அவர் முடிவான வார்த்தைகளை அல்லது என்ன சொல்லுவாரோ அதைப் பேசுவோம். 61